ஒரு வாரம் முன்பே எழுதிய பதிவு. தேர்தல் பதிவுகள் காரணமாக தாமதமாக வெளியிடுவதில் வருந்துகிறேன்.
நாற வாய் நாரோயில் ஆஜான்
எழுதுபவர்களையும்
வாசகர்களையும் தான் எப்படி கனிவோடு அணுகுகிறேன் பார்த்தாயா என்று 01.03.2021
என்று ஆஜான் அளித்த தன்னிலை விளக்கம்
கீழே உள்ளது.
இவர்களில்
மிகப்பெரும்பாலானவர்களைப் பற்றி நான் ஒரு வார்த்தைகூட சொன்னதில்லை. உண்மையில் பலருடைய
பெயர்களையே நான் கேள்விப்பட்டதில்லை. அவர்களைப் பற்றி இனிமேலும் பேசப்போவதில்லை.
மிக அரிதாகச்
சிலரைப்பற்றி ஓரிரு வரிகள் மென்கேலியாகச் சொல்லியிருப்பேன். அவர்கள் மீதான
கனிவுடனேயே சொல்கிறேன். அவர்கள் எழுதியவற்றின் மேல் எனக்கு எந்த மதிப்பும்
ஈடுபாடும் இல்லாமலிருக்கலாம், அவர்கள் என்னை வசைபாடுவதை நான் அறிந்துமிருக்கலாம்.
ஆனாலும் அந்த கனிவு உண்டு.
ஏனென்றால்
எழுதுபவர், வாசிப்பவர் எவராக இருந்தாலும் அவர் தமிழ்ச்சூழலில் மிக அரியவர்.
ஆயிரத்தில் பல்லாயிரத்தில் ஒருவர். அவர் எனக்கு அணுக்கமானவர்தான்.
ஒருவரின் படைப்பிலக்கியச்
செயல்பாட்டை நான் நிராகரிப்பதில்லை. ஓர் இலக்கியத்தோல்வியை கொண்டாடுவதுமில்லை.
அரிதாக, சிலர் சிலவகை பாவனைகளை கொண்டு மேட்டிமை நடிக்கும்போது, அதனூடாக சில
திரிபுகளை உருவாக்கும்போது மட்டும் கூர்மையாக அவர்களின் இடம் உண்மையில் எவ்வளவு
என்று சுட்டுகிறேன். அதுவும் ஒன்றுக்கு இருமுறை யோசித்தபின்பு.
தன்னை வசை
பாடுபவரைக் கூட எப்படி கனிவோடு பார்க்கிறார் ஆஜான்! இவரல்லவோ ஜெண்டில்மேன் என்று
உங்களுக்கு தோன்றலாம்.
ஆனால்
அப்படியெல்லாம் ஒரு பிம்பம் உருவாவதை அவரது ஆணவம் அனுமதிக்காது.
அவரது “அறமென்ப”
சிறுகதை குறித்து அதன் அபத்தங்களை சுட்டிக் காட்டி மூவர் எழுதியதை சில நாட்கள்
முன்பாக பகிர்ந்து கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இல்லையென்றால் இந்த
ஆஜானுக்கு கோபம்
வந்து விட்டது.
“பிழைப்
பொறுக்கிகள்” என்று தலைப்பு கொடுத்து ஒரு செல்ஃபி கேள்வி பதில் பதிவு போட்டு
விட்டார். அதில் அவரது இலக்கு தோழர் இரா.முருகவேள் மட்டுமே.
எழுதுபவர்களை
கனிவோடு அணுகுவேண் என்று சொல்லும் புளிச்ச மாவு ஆஜான், தோழர் இரா.முருகவேளைப்
பற்றி எழுதியுள்ளதை படியுங்கள். நான் ஒன்னும் வெண்முரசு படிங்க, அவரோட சிறுகதைகளை
படிங்க என்று சொல்லி உங்களுக்கு கொடூரமான தண்டனையெல்லாம் கொடுக்க மாட்டேன்.
25.03.2021
நீங்கள் சொல்வது
சட்டம் மற்றும் நடைமுறை. அத்துறையில் இருக்கிறீர்கள். முருகவேளுக்கு சட்டமும்
தெரியாது நீதிமன்றமும் தெரியாது நடைமுறையும் தெரியாது. இலக்கியம் அறிமுகமே இல்லை.
கேஸ் நடைமுறையெல்லாம் இப்படித்தான் இருக்கும்போல என நம்பி கற்பனை செய்து
எழுதியிருக்கிறார்.
ஆனால் தெரிந்தது
ஒன்று உண்டு, அது உங்களுக்குத் தெரியாது. அரசியல். அதிலும் முகநூல் வம்பரசியல்.
இங்கே ‘ஏழைப்பங்காளன்’ ‘முற்போக்கு’ ‘கலகன்’ ‘புரட்சியாளன்’ என பல வேடங்கள் உண்டு.
இந்த கூட்டத்தை இலக்காக்கி ஓர் அரசியலை எழுதுகிறார், அவ்வளவுதான். அவர்களுக்கு
உண்மை முக்கியமில்லை. தாங்கள் அணியும் வேடத்துக்குரிய கூச்சல்களே முக்கியம்.
நீங்கள் சட்டம்,
தர்க்கம் ஆகியவற்றை முன்வைக்கிறீர்கள். அது அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. நீங்கள்
‘உயர்குடி’ வக்கீல் அவர் ‘ஏழைப்பங்காளி’ என ஒரு வேடம்போட்டு ஒரு ஆட்டம் ஆடி
அப்படியே கடந்து செல்வார். இதைப் பொருட்படுத்தியிருக்கவேண்டியதில்லை.
இந்த
’இழிவுபடுத்தல்’ குற்றச்சாட்டு இன்று எல்லா கதைகள் மேலும் வைக்கப்படுகிறது. இந்தக்
கூட்டம் உருவாக்கும் கெடுபிடிகளுக்கு உள்ளே நின்று எழுதாத அத்தனைபேர் மேலும் இந்த
தாக்குதல் கூட்டாகத் தொடுக்கப்படுகிறது. சென்ற
சில மாதங்களில் மட்டும் என்னுடைய பத்து கதைகளைப்பற்றி இழிவுபடுத்துகிறார் என
முகநூலர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்களே எனக்கு நகலெடுத்து
அனுப்பியிருக்கிறார்கள்.
எல்லா காலத்திலும்
இலக்கியம் இவர்களுக்கு மேலே, இவர்களை பொருட்டெனக் கருதாமல், கடந்து செல்கிறது.
தோழர் இரா.முருகவேள்
நீண்ட காலமாக வழக்கறிஞராக பணியாற்றி வரும் ஒரு மூத்த வழக்கறிஞர். அவருக்கு சட்டம்,
நடைமுறையெல்லாம் தெரியாதாம்.
“ஒரு பொருளாதார
அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” “எரியும் பனிக்காடு” ஆகிய இரண்டு அற்புதமான
தமிழாக்கங்களை செய்தவர். மூணாறு தேயிலைத் தோட்டங்களின் வழியே பயணிக்கையில் அதன்
அழகை விட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் துயரங்களே நினைவுக்கு வந்தது. மொழிபெயர்ப்பு என்ற சிந்தனையே இல்லாமல்
நேரடியாக தமிழில் எழுதப்பட்டது போன்ற வாசிப்பனுபவத்தை அளித்த நாவல். அது போலத்தான் “ஒரு பொருளாதார அடியாளின்
ஒப்புதல் வாக்குமூலம்” நூலும்.
மிளிர் கல்,
செம்புலம் ஆகிய நாவல்கள் மிகச் சிறந்த நூல்கள்கள். சமீபத்தில் வெளியான புனைபாவை
நூலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது (இன்னும் படிக்கத் துவங்கவில்லை) சட்டம்
தெரியாதவர் என்று சொல்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் இலக்கியம் பற்றியும்
அவருக்கு எதுவும் தெரியாது என்று சொல்கிறார்.
இரா.முருகவேளின்
சிறுகதையை ஆஜான் குறை சொன்னதால் ஆஜானின்
கதையை அவர் திட்டுகிறார் என்று செல்ஃபி கேல்வியில் சொல்கிறார். கடந்த சில
மாதங்களில் பத்து கதைகளை அவர் இழிவு படுத்தியுள்ளாராம்.
“அறமென்ப” கதையைத்
தவிர வேறு எந்த கதையைப் பற்றியும் தோழர் இரா.முருகவேள் விமர்சிக்கவில்லை. “பத்து
லட்சம் காலடிச் சுவடுகள்” கதைக்கு மற்ற பலரிடமிருந்து அடி கிடைத்தது என்பது வேறு
விஷயம். மனுஷன் வாயைத் திறந்தால் வருவது பொய்யும் அவதூறும் மட்டுமே. அதனால் இனி
புளிச்ச மாவு ஆஜான் “நாற வாய் நாரோயில் ஆஜான்”.
No comments:
Post a Comment