Tuesday, January 26, 2021

செங்கோட்டையும் மூவர்ணக் கொடியும் மகிழ்ந்திருக்கும்

 டெல்லி எல்லையில் போராடிய விவசாடிகள் தங்கள் டிராக்டர்களில் இன்று டெல்லிக்குள் அணிவகுத்து செங்கோட்டையையும் வந்தடைந்துள்ளனர்.








வரலாற்றுச் சின்னத்தை போராட்ட களமாக மாற்றலாமா? 

மூவர்ணக் கொடி ஏற்றும் இடத்தில் வேறு கொடி ஏற்றலாமா?

காலிஸ்தான் கொடி அல்லவா அது! நியாயமா இது?

இப்படிப்பட்ட கேள்விகளோடு சங்கிகள் கதறிக் கொண்டிருக்கிறார்கள். அது காலிஸ்தான் கொடி என்பது சங்கிகளின் வழக்கமான கட்டுக்கதை என்பது நிரூபணமாகி விட்டது.

டெல்லி செங்கோட்டைக்கு வரலாற்று பின்னணி என்பது என்ன? முகலாயர்கள் காலத்தில் கட்டப் பட்டது என்பது ஒரு புறம் இருக்கட்டும், விடுதலை அடைந்ததும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்ட இடம். விவசாயிகள் போராட்டமும் அடிப்படையில் விடுதலைக்கான போராட்டம்தானே! இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுகளின் அடிமையாக மாற்ற விடாமல் நடப்பதற்கான விடுதலைப் போராட்டம்தான். 

வேலூர் காரனாக எழுதுகிறேன். வேலூர் கோட்டைக்கு சிறப்பு அதன் அழகோ, அகழிகளோ அல்ல, இந்திய விடுதலைக்கான முதல் போராட்டம் இந்து முஸ்லீம் வீரர்களின் ஒற்றுமையால் நடந்தது என்பதால்தான். எனவே வரலாற்றுச் சின்னத்தில் போராட்டம் நடைபெறுவது என்பதுதான் அந்த வரலாற்றுக்கே பெருமை.

இருபது ஆண்டுகள் முன்பு வரை மூவர்ணக் கொடியை ஏற்காத கூட்டம், விடுதலையைக் காட்டிக் கொடுத்த துரோகிகளின் வாரிசுகள் ஏற்றும் போதுதான் மூவர்ணக் கொடி வருந்தியிருக்கும். முகம் துடைக்கும் துண்டாக தன்னை பயன்படுத்திய மோடி போன்ற பாவிகள் ஏற்றும் அளவிற்கு நம் தரம் தாழ்ந்து விட்டதே என்று வேதனைப் பட்டிருக்கும்.

உண்மையான விடுதலை வீரர்கள் ஏற்றிய கொடி தன் அருகில் உள்ளதே என்று மூவர்ணக் கொடி மகிழ்ந்திருக்கும், செங்கோட்டை பெருமிதம் அடைந்திருக்கும்.




4 comments:

  1. எதூ வேலூர்காரரா?... இது எப்ப

    அன்பே சிவம்...

    ReplyDelete
  2. 29 வருஷமா இங்க இருக்கறவன், சொந்த வீடு கட்டி வாழ்க்கையின் எஞ்சிய காலத்தையும் இங்கே கழிக்கப் போறவன், வேலூர்காரன் கிடையாதா தோழர்? வந்தேறி ன்னு சொல்றீங்களா?

    ReplyDelete
  3. தங்களைப் போன்ற தங்க மனதுக்காரர்களுடன் சில நச்சுக் கிருமிகளும் ஊடு பயிராய் ஊடுருவியியுள்ளது. கண்டும் காணாதிருத்தல் நமக்கடுக்குமோ?.

    நம்ம ஜாதிக்கடுக்குமோ?... என பாரதியின் வார்த்தையில் எழுத நினைத்தே துவங்கினேன்...

    சிப்பாய் புரட்சி பிறந்த பூமியிலேயே சிற்சில காம்புகள் பூநாகமாய் முளைத்திருப்ப தரிந்தும் அறியாதவர் போல் நடித்திடல் நமக்கழகல்ல.

    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போல சத்தியமா புரியலை. என்றைக்குத்தான் நீங்கள் நேரடியாக எழுதப் போகிறீர்களோ?

      Delete