Friday, March 20, 2020

கைத்தட்டல் கூட காப்பியா மோடி?


மோடியின் லூசுத்தனமான கைத்தட்டல் அறிவிப்பு தொடர்பாக காலையில் பதிவிட்டிருந்தேன்.

ஒரு தோழர் கீழ்க்கண்ட காணொளியை அனுப்பியிருந்தார். 



ஸ்பெய்ன் நாட்டு பிரதமர் தங்கள் நாட்டு மருத்துவர்களை பாராட்டி தொலைக்காட்சியில் உரையாற்றிய போது நாம் அவர்களை கைதட்டி பாராட்ட வேண்டும் என்று சொல்ல தன்னெழுச்சியாக அந்த நிகழ்வு அங்கே நடந்திருக்கிறது. 

ஆனால் மக்கள் ஹர்த்தால், கைதட்டல் போன்றவை மட்டும் அங்கே அரசின் நடவடிக்கையாக இருந்து விடவில்லை.

பாதிப்பு அங்கே அதிகம் என்பதால் அதற்கேற்றார்போல நடவடிக்கைகளும் இருந்துள்ளது. மக்களை தாக்க இங்கே ராணுவம் பயன்படுத்தப்படுவது போல அல்லாமல், வெள்ள நிவாரணப் பணிக்கு கேரளா சென்றதற்கு பில் போட்டு அனுப்பியது போல அல்லாமல் மக்களை பாதுகாக்கும் பணிக்கு ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

அறிவியலுக்குப் புறம்பான கோமியப் பார்ட்டிகளை ஊக்குவித்து அறிவியல் ஒன்றும் செய்யவில்லை என்று புலம்புவதற்கு மாறாக அறிவியல்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக அனைத்து மருத்துவ மனைகளும் மருத்துவ சேவைகளும் தேசிய மயமாக்கப்பட்டுள்ளது. 

ஆனால் கேரள மாநிலம் எடுத்து வரும் நடவடிக்கையில் கால் தூசி அளவு கூட எந்த முன் முயற்சியும் இல்லாமல் மக்கள் ஹர்த்தால், கைத்தட்டல் என்று மோடியின் நடவடிக்கைகள் நாடகத்தனமாகவே உள்ளது.

அதிலே அந்த கைத்தட்டல் என்பது கூட  மோடியின் மூளையில் உதித்தது அல்ல, ஸ்பெயின் நாட்டை காப்பி அடித்தது என்பதை தெரிந்து கொள்ளும் போதாவது அவருக்கு இன்னும் முட்டு கொடுக்கும் சிலர் திருந்தினால் நல்லது.

1 comment:

  1. அவராவது திருந்துவதாவது....

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 20 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது கைத்தட்டல் கூட காப்பியா மோடி? பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete