Saturday, March 21, 2020

ரஞ்சன் கோகய் வகையறாக்களுக்கு

தோழர் ஸ்ரீரசா அவர்களின் முக நூல் பக்கத்தில் பார்த்ததை பெருமூச்சோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நீதித்துறையின் சீரழிவு நாட்டிற்கு நல்லதல்ல. மோடியின் ஆட்சியில் சீரழிவு என்பதைத் தவிர வேறென்ன நடந்துள்ளது!!!!



கண்ணில்பட்ட பதிவு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த மெகர் சந்த் மகாஜன் டார்ஜிலிங் சுற்றுலா போனார். அங்கே அவர் கார் ஓட்டிச் சென்றபோது போக்குவரத்து விதியை மீறினார்.

தவறை ஏற்று அபராதம் கட்டுவதாகச் சொன்ன மகாஜன், மறுநாள் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போய் நின்றார்.

``உங்கள் பெயர் என்ன?'' என்று மாஜிஸ்திரேட் கேட்க... ``மகாஜன்'' என்றார்.


'``என்ன வேலை பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டபோது, ``சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கிறேன்'' என்று தயங்காமல் சொன்னார்.

உடனே அந்த மாஜிஸ்திரேட்
``மை லார்டு'' எனப் பதறி எழுந்து மகாஜனை வணங்கினார்.


``உட்காருங்கள். உங்கள் டூட்டியைச் செய்யுங்கள்'' என்றார் மகாஜன்.
``முதல்முறை தவறு செய்கிறவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் எனக்கு உண்டு.
அதனால், உங்களை விடுவிக்கிறேன்'' என்றார் அந்த மாஜிஸ்திரேட்.
மகாஜன் வெளியில் வந்தார்!
மெகர் சந்த் மகாஜன்


* சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.சத்தியதேவ் ஒரு நாள்கூட விடுமுறை எடுத்ததே இல்லை.

அவர் மகனுக்கு வீட்டில் வைத்துத்தான் பதிவுத் திருமணம் நடத்தப்பட்டது. அந்தத் திருமணத்துக்காக வந்த, சக நீதிபதிகள் எல்லாம் அரை நாள் விடுமுறை போட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், சத்தியதேவ் தன் மகனின் திருமணம் முடிந்த கையோடு கோர்ட்டுக்குக் கிளம்பிப் போனார்.


அவருக்குத் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு வாய்க்கவில்லை.
தலைமை நீதிபதி 6 வாரத்துக்கு மேல் விடுமுறை எடுத்தால்
`பொறுப்பு தலைமை நீதிபதி’ நியமிக்கப்படுவது வழக்கம்.
அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ஆனந்த், பொறுப்பு தலைமை நீதிபதியாக சத்தியதேவ் சில காலம் இருக்க வேண்டும் என்பதற்காகவே
6 வாரம் விடுமுறை எடுத்தார்.


அந்த அளவுக்கு மதிக்கப்பட்டவர் சத்தியதேவ்!

* குரு பிரசன்ன சிங்.
மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர்.

``பள்ளி ஆவணத்தில் சொல்லப்பட்ட வயதுக்கும் உண்மையான வயதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உண்மையான வயது அடிப்படையில் எனக்கு ரிட்டையர்மென்ட் தேதி வந்துவிட்டது.
அதனால், ஓய்வு பெறுகிறேன்'' எனச் சொல்லிக் கிளம்பிவிட்டார்.

குரு பிரசன்ன சிங் உண்மையை மறைத்திருந்தால் கூடுதலாக ஒன்றரை ஆண்டு இருந்து,

பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாகி இருப்பார். மனசாட்சிக்குப் பயந்து நேர்மையோடு நடந்துகொண்ட புண்ணியவான்!


* ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது ஆசிட் அடித்தது,  நீதிபதி மருமகன் மீது கஞ்சா வழக்கு, வழக்குப் போட்ட வழக்கறிஞர்களுக்கு வெட்டு, நீதிபதி வீட்டுக்குக் குடிநீர் கட் என 1991-1996 ஜெயலலிதா ஆட்சியில் நடந்த திகில் விஷயங்கள் அனைத்தும் நீதிபதி குன்ஹாவுக்கு நன்றாகவே தெரியும்.


அப்படியான சூழலில் சுதந்திர இந்திய வரலாற்றில் பதவியில் இருக்கும் ஒரு முதல்வரை, ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்புகிறார் என்றால் குன்ஹா எவ்வளவு பெரிய நீதிமான்

* நீதிபதி கே.பி.சுப்பிரமணியம் கவுண்டரின் தந்தை கே.எஸ்.பழனிசாமி கவுண்டர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார்.

சென்னை சென்ட்ரல் அருகே அவர் ஓட்டி வந்த கார் சிக்னலைத் தாண்டி வந்துவிட்டது.
அந்தக் காரை மடக்கி அருகில் இருந்த நடமாடும் நீதிமன்றத்தில் பழனிசாமியை நிறுத்தினார்கள்.


இவரைப் பார்த்ததும் மாஜிஸ்திரேட் அரண்டு போனார். ``அபராதம் கட்டத் தேவையில்லை'' என மாஜிஸ்திரேட் சொல்லியும்   பத்து ரூபாய் அபராதத்தைக் கட்டிவிட்டுத்தான் போனார் நீதிபதி பழனிசாமி.


* மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதியின் தியாகம் இது!

ஒரு வழக்குக்குத் தீர்ப்பு தேதி குறித்துவிட்டார் அந்த நீதிபதி.  அன்றைய தினம் கோர்ட்டுக்கு வந்த நீதிபதியின் முன் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தயாராக நின்று கொண்டிருந்தார்கள். `  `என்ன விவரம்?'' என்று அவர் கேட்க... ``இன்று எங்களது வழக்குக்குத் தீர்ப்புச் சொல்வதாகச் சொல்லி இருந்தீர்கள்'' என்று  வழக்கறிஞர்கள் சொன்னார்கள்.

உடனே கேஸ் கட்டை எடுத்துப் பார்த்தவர். ``இதோ வருகிறேன்'' எனச் சொல்லி அறைக்குப் போனார். தன் மறதிக்கான தண்டனையாக,   ராஜினாமா கடிதத்தை எழுதித் தந்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டார்.


* சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் சுப்பிரமணிய ஐயர்.   அவர் முன்பு வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கின் ஆவணங்களை அவரிடம் நீட்டியபோது அதைப் படிக்கச் சிரமப்பட்டார்  சுப்பிரமணிய ஐயர்.
இன்னொரு கண்ணாடியை மாற்றிப் போட்டுப் படிக்க முயன்றும் முடியவில்லை. 

பெஞ்ச் கிளார்க்கிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். படித்துக் காட்டப்பட்டது. வழக்கறிஞரும் அதைப் படித்தார்.  என்ன நினைத்தாரோ உடனே சேம்பருக்குப் போன சுப்பிரமணிய ஐயர், ஆளுநருக்குத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டார். ஆம். `கண் பார்வை மங்கிய பிறகு பணியில் இருப்பதில் அர்த்தம் இல்லை’ எனப் பதவியை உதறியவர் சுப்பிரமணிய ஐயர்.


- இப்படி தியாக வாழ்க்கை வாழ்ந்த நீதிமான்கள் நிறைய பேர் நீதித்துறையில் நிரம்பியிருக்கிறார்கள்.
அன்றும் இருந்தார்கள்.
இன்றும் இருக்கிறார்கள்.
ஜனாதிபதிக்கே பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டிய பதவி.


Arunagiri Sankarankoil

4 comments:

  1. அப்படியும் சிலர்... இப்படியும் சிலர்...

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 20 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது ரஞ்சன் கோகய் வகையறாக்களுக்கு பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
  2. கட்செவியில் வந்தது... இப்பொழுதுதான் படித்தேன்

    ReplyDelete
  3. அரசியல்வாதிகளாக இருந்து தங்கள் கட்சிகளால் ப்ரொமோட் செய்யப்பட்டு சுப்ரீம்கோர்ட் நீதிபதி ஆனவர்களெல்லாம் அப்படி ஆனது சரியா? (உதாரணமா நீதிபதி கிருஷ்ண ஐயர், முன்னாள் கம்யூனிஸ்ட் மந்திரி) இதற்கு முன்பும் நீதிபதிகள், ப்ரைவேட் வேலைகளுக்குச் சென்றிருக்கிறார்களே. ஏன்... அதிகாரிகள் எத்தனைபேரை (தாங்கள் சொல்லியதைச் செய்தார்கள் என்பதற்காக) கவர்னர்களாக காங்கிரஸ் அரசு ஆக்கியிருந்தது? இதற்கு முன்பு சதாசிவம் அவர்களும் கவர்னர் ஆக்கப்பட்டாரே. என்னைக்கேட்டால், பொலிட்டிகல் பேக்ரவுண்ட் அல்லது கட்சி சார்பு இருந்தவர்கள் நீதிபதிகளாக ஆகவே கூடாது. நீதித்துறையில் இருப்பவர்கள், வங்கித் தலைவர்கள்/டெஸிஷன் மேக்கர்ஸ், அரசு அதிகாரிகள் அனைவரும் ஓய்வு பெற்ற பிறகு எங்கும் வேலை செய்யக்கூடாது, கட்சி சார்பு உள்ளவர்கள் நீதித்துறைக்கு வரக்கூடாது என்று சட்டம் வந்தால் நல்லதுதான்.

    இந்த குன்ஹாவும் (ஏதோ காரணத்துக்காக) தன் நண்பர்களுக்கு உதவியது எல்லாம் செய்திகளாக வந்ததே. அதனால் நமக்குப் பிடிக்காதவர்கள் தண்டனை பெற்றால் நீதித்துறை சரியாக செயல்பட்டிருக்கிறது என்றும், நமக்குப் பிடித்தவர்கள் தண்டனை பெற்றாலோ இல்லை பிடிக்காதவர்கள் விடுதலை பெற்றாலோ, நீதித்துறை மோசம் என்று எண்ணுவதே தவறு என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete