Tuesday, March 17, 2020

டாஸ்மாக் குடிமக்களின் அரசு


கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.

கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. தியேட்டர்கள், மால்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை விடுதிகள், பார்கள் (டாஸ்மாக் பார்கள் உட்பட) மூடப்பட்டுள்ளன.

திருமணங்களுக்கெல்லாம் செல்வதைக் கூட தவிர்க்கச் சொல்லி உள்ளது. சட்ட சபைக்கு பார்வையாளர்கள் அனுமதி கிடையாது.

இத்தனை நடவடிக்கை எடுத்துள்ள அரசு ஏன் டாஸ்மாக் கடைகளை மட்டும் மூடவில்லை?

ஒருவரை ஒருவர் முண்டித் தள்ளி சரக்கை கைப்பற்ற போட்டி போடும் காட்சியை தமிழகமெங்கும் காண முடியும். வைரஸ் தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ள இடம் அதுதான்.

அதை மூடாமல் இருப்பது முறையா?

ஆனால் அப்படி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

ஏனென்றால்

டாஸ்மாக் குடிமக்களை மட்டுமே நம்பியுள்ள அரசு இது.

சரக்கு விற்பனையில் வரும் கைசைக் கொண்டு ஆட்சி நடத்தும் அரசு இது. 

1 comment:

  1. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 14 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது டாஸ்மாக் குடிமக்களின் அரசு பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete