Wednesday, March 4, 2020

ஹோலிக் கொண்டாட்டம் ஒரு கேடா?


கிட்டத்தட்ட ஐம்பது பேர் இறந்து விட்டார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் வீடிழந்து சொந்த ஊரிலேயே அகதிகளாகி விட்டார்கள். பள்ளிகள் எரிக்கப்பட்டுள்ளன. காயத்துடன் துடிப்பவர்கள் எண்ணிக்கையும் பல மடங்கு.

காவிக்கயவர்களின் வெறியாட்டத்தால் டெல்லியின் நிலைமை இது. அமித்ஷா ஆசியோடு பாஜக தலைவர்களின் வெறிப்பேச்சால் குரங்குப் படை செய்த அராஜகம் இது.

இந்த வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றால் 

"ஹோலிக் கொண்டாட்டம் முடிந்த பிறகுதான் இப்பிரச்சினை குறித்து விவாதிக்க முடியும்"

என்று மக்களவைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவரும் பிடிவாதமாக இருந்து விட்டார்கள்.

பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகள் நாடாளுமன்றம் பக்கம் தலை வைத்து படுக்கவேயில்லை.

ஒரு மிகப் பெரிய கொடுமை நிகழ்ந்து மக்களில் ஒரு பகுதியினர் துயரத்தில் தவிக்கையில்

சங்கிகளுக்கு ஹோலிக் கொண்டாட்டம் முக்கியமாகப்படுகிறது.

ரோம் நகரம் தீப்பற்றி கருகுகையில் பிடில் வாசித்த நீரோ மன்னன் செத்துப் போகவில்லை. மோடியின் வடிவில் உயிர் வாழ்கிறான்.


No comments:

Post a Comment