Monday, March 16, 2020

குஜராத்திலும் கூட . . .



பில்லா ரங்கா கிரிமினல் கூட்டணி தன் கைவரிசையை மத்தியப் பிரதேசத்திற்கு அடுத்து குஜராத்திலும் காண்பித்து விட்டது.

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களை குஜராத்தில் பெறும் வாய்ப்பு இருந்தது. 

வழக்கம் போல பாஜக குதிரை பேரம் நடத்தி நான்கு எம்.எல்.ஏ க்களை பதவி விலக வைத்து காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெறும் நிலைக்கு தள்ளி விட்டது. 

தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் வெற்றி பெற்றவர்களை விலைக்கு வாங்குவதில் பாஜக வெற்றி பெற்று வருகின்றது.

காங்கிரஸ் கட்சி தன் பலவீனங்களைப் போக்காவிட்டால் ராஜஸ்தானிலும் சட்டிஸ்கரிலும் கூட விரைவில் ஆட்சியை இழக்கும்.


No comments:

Post a Comment