Friday, March 13, 2020

அந்த ஆட்டோக்காரர் என்ன நினைத்தாரோ?


நேற்று முன் தினம் அலுவலகத்திலிருந்து வீடு திரும்புகையில் வேலூர் மாவட்ட ஆட்சியரகம் அருகில் போக்குவரத்து போலீசார், ஹெல்மெட் அணியாதவர்களை வளைத்து வளைத்து பிடித்துக் கொண்டிருந்தார்கள். 

அப்போது அந்த வழியே பள்ளிக்குழந்தைகளை ஏற்றிய ஆட்டோ ஒன்று கடந்தது.

அந்த ஆட்டோவில் இருந்த குழந்தைகள் காவலர்களைப் பார்த்து

"போலீஸ், போலீஸ், எங்க ஆட்டோக்காரரையும் பிடிங்க" 

என்று உரத்த குரலில் சத்தம் போட

கடந்து கொண்டிருந்த அனைவருமே சிரித்து விட்டோம்.

குறும்புக்கார குழந்தைகள் என்று என் மனதில் தோன்றியது.
அந்த ஆட்டோக்காரர் என்ன நினைத்தாரோ?

பிகு 1 : இணையத்திலிருந்து எடுத்த படம். அதனால் ஆட்டோக்காரர் முகம், ஆட்டோ எண் ஆகியவற்றை மறைத்து விட்டேன்.

பிகு2 : தலைப்பைப் பார்த்து ஆட்டோ ஓட்டிய மாணிக்கம் பற்றிய பதிவு என்று நினைத்திருந்தால் I AM SORRY.  

1 comment:

  1. அந்த ஆடடோக்காரர் மீது என்ன தவறோ?

    தங்கள் பதிவில் குறிப்பிட்ட இடத்தில் Page break தெரிவை பயன்படுத்துங்கள்.

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது அந்த ஆட்டோக்காரர் என்ன நினைத்தாரோ?. பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete