Saturday, March 14, 2020

கொலைக்கு தூண்டிய யோகி சீ க்கு ????


பாலியல் வன் கொடுமைகளுக்கு இந்தியாவின் தலை நகராக திகழ்கின்ற உத்திர பிரதேச மாநிலம் உனாவ் தொகுதியின் பாஜக சட்ட மன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செனகருக்கு சி.பி.ஐ சிறப்பு நீதி மன்றம் பத்தாண்டு கடுங்காவல் தண்டனை அளித்துள்ளது.

செனகரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் தந்தையை காவல் நிலையத்தில் கொலை செய்த வழக்கில் கொடுக்கப் பட்ட தீர்ப்பு இது.

இந்த தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

தன் மகளுக்கு நீதி வேண்டும் என அந்த தந்தை மாநில முதல்வர் யோகிசீ வீட்டின் முன்பாக தீக்குளிக்க முயல்கிறார்.

அந்த நபரை தகாத வார்த்தைகளில் திட்டி, பொய்யர் என்றெல்லாம் ஏசி விட்டு கைது செய்யச் சொன்னதும் யோகிசீ தான்.

லாக்கப்பில் மரணம் அதற்குப் பிறகுதான் நிகழ்கிறது.

அந்த தந்தை தன் மகளுக்கு நியாயம் கேட்டு முதன் முதலில் வந்த போதே யோகிசீ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தீக்குளிக்கும் அளவிற்கு சென்ற பிறகும் தன் கட்சியின் பொறுக்கி எம்.எல்.ஏ விற்கு சாதகமாகவே இருந்துள்ளார்.

இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக சி.பி.ஐ யோகிசீ யைத்தான் முன்னிறுத்தி இருக்க வேண்டும்.

காவி ஆட்சியில் எந்த நேர்மையும் இருக்காதே!

1 comment:

  1. அவருக்கும் சில வருடங்களில் பொது மன்னிப்பு வழங்கப்படலாம்...

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 14 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது கொலைக்கு தூண்டிய யோகி சீ க்கு ???? பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete