கேரள ஆட்டுத்தாடி நேற்று பத்திரிக்கையாளர்களிடம் பேசியதை இன்று காலை படித்தேன்.
மன நிலை பிறழ்ந்தவன் போல அந்த உரை இருந்தது. ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தவில்லையே தவிர முற்றிலும் தரக்குறைவான பேச்சு. ஒரு அரசியல் சாசனப் பதவி வகிக்க அருகதையற்ற ஜென்மம். பேட்டை ரவுடி போல ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கு வரியா என்று சவால் வேறு!
மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களை உசுப்பேற்றி தன்னை அடிக்க வைக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறது ஆட்டுத்தாடி. பின்பு அதைக் காரணம் காண்பித்து தோழர் பினராயி விஜயன் ஆட்சியை கலைக்க பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகள் திட்டம் போட்டுத் தந்திருப்பார்கள் போல.
அய்யா ஆளுனரே, நீ வேண்டுமானால் அசிங்கப்பட்டு அடிபட்டு கேரளாவை விட்டு ஓடலாம். ஆட்சியை கலைக்க உன் எஜமானனுங்களாலும் முடியாது.
No comments:
Post a Comment