Friday, November 11, 2022

கூகிள் கொண்டு சேர்த்த இடம்

 வழி தவறிய கதை.

 போன மாத இறுதியில் திருச்சி சென்றேன். மூன்று மணிக்கு வேலூரிலிருந்து புறப்பட திட்டமிட்டு, அது நான்காகி கடைசியில் ஐந்து மணிக்குத்தான் புறப்பட முடிந்தது. திருச்சி 1 எல்.ஐ.சி அலுவலகத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தேன்.

 திருச்சியை நெருங்கும் நேரத்தில் என் கார் ஓட்டுனரோ, நிறைய மேம்பாலம் இருக்கு அதனால் கூகிள் மேப் போடுங்கள் என்றார். திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில்தான் அலுவலகம் என்பதால் அதற்கு வழி காட்டுமாறு கூகிளாரைக் கேட்டுக் கொண்டேன்.

 லெப்ட் போ, ரைட் போ என்று அவர் சொன்ன வழியிலேயே போனால் “நீங்கள் செல்ல வேண்டிய இடம் வந்து விட்டது. இடது புறத்தில் உள்ளது” என்றும் சொன்னார். 

 அப்போது இரவு 11 மணி. ஒரே கும்மிருட்டு.  கூகிளார்  என்னவோ சொதப்பி விட்டார் என்பது மட்டும் புரிந்தது.

 அவர் எங்கே கொண்டு வந்து நிறுத்தினார்  என்பதை புகைப்படத்தில் பாருங்கள்.

 



திருச்சி மாநகராட்சியின் நவீன மாட்டிறைச்சி அறுக்கும் இடமும் பக்கத்தில் ஒரு கல்லறைத் தோட்டமும்தான்  கூகிளார் கொண்டு வந்து நிறுத்திய மத்திய பேருந்து நிலையம்.

 பிறகு விசாரித்து விசாரித்து செல்ல வேண்டிய இடத்திற்கு போனோம் என்பது வேறு கதை.

1 comment: