இளம் கால்பந்து வீராங்கனை
பிரியாவின் துயரமான மரணத்தை தொடர்ந்து சங்கிகளும் இதர சங்கி அடிமைகளும் இந்த சம்பவத்திற்காக
திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென்று துவக்கியுள்ளார்கள்.
இந்த மரணத்துக்கு
பொறுப்பான மருத்துவர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள்
மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சொல்லியுள்ளது. அந்த
குடும்பத்திற்கு இழப்பீடு பத்து லட்சமும் குடும்பத்தில்
ஒருவருக்கு அரசு வேலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இழப்பீட்டை அதிகப்படுத்துங்கள்
என்று கோரிக்கை வைப்பது கூட நியாயமாக இருக்கலாம். அதிலே எடப்பாடி கேட்டுள்ளது ஒரு கோடி.
அதை மிஞ்ச ஆட்டுக்காரன் கேட்டுள்ளது இரண்டு கோடி.
இது அரசின் கொள்கை
முடிவால் ஏற்பட்ட மரணம் என்றால் அரசை பதவி விலகச் சொல்வது கூட ஏற்புடையதாக இருக்கும்.
ஆனால் இது அப்படியா?
செல்லா நோட்டு எனும்
மோடியின் முட்டாள்தன முடிவால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்களே, அதற்கு
மோடியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று இவர்கள் கேட்டார்களா? அது கொள்கை முடிவு. அதற்கு
மோடியை பதவியிலிருந்து தூக்குவது என்பது நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரி.
கொரோனா காலத்தில்
அவசரகதியிலான லாக்டவுனால் இறந்து போனார்களே, அதற்காக மோடியை டிஸ்மிஸ் செய்யச் சொன்னார்களா?
குஜராத் தேர்தல் பிரச்சாரத்திற்காக
மோர்பி தொங்கும் பாலத்தை திறந்து விட்டார்களே, அதற்கு குஜராத் முதல்வரை டிஸ்மிஸ் செய்யச்
சொன்னார்களா?
ஆக்ஸிஜன் சிலிண்டர்
கம்பெனிக்கு பணம் கொடுக்காமல் அலட்சியப் படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள்
கோரக்பூரில் இறந்தனவே, மொட்டைச் சாமியார் அரசை டிஸ்மிஸ் செய்யச் சொன்னார்களா?
மோடியும் குஜராத்
முதல்வரும் மொட்டைச் சாமியாரும் டிஸ்மிஸ் செய்யப்பட தகுதியானவர்கள். அவர்கள் விஷயத்தில்
வாய் பேசாத யாருக்கும் இப்போது வாய் திறக்க அருகதையே கிடையாது.
குஜராத் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
ReplyDeleteதமிழக அரசையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
எதற்கு தகுதியிலாதவர்களுக்கு கொடி பிடிக்க வேண்டும்
குஜராத் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
ReplyDeleteதமிழக அரசையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
எதற்கு தகுதியிலாதவர்களுக்கு கொடி பிடிக்க வேண்டும்
இந்த பிரச்சினைக்காக தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்பது அபத்தம்
Delete