Wednesday, November 30, 2022

மாத்தியாவது சொல்லுங்கடா !!!

 


கோவா சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக்குழுவினர் மோடி விளம்பரம் செய்த “காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படத்தை கழுவி கழுவி ஊற்றியதற்கு சங்கிகள் தரப்பிலிருந்தும் மோடிக்கு ஆதரவாக இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதரும் எதிர்வினை ஆற்றியுள்ளார்கள்.

தேர்வுக்குழு தலைவர் இஸ்ரேல் நாட்டின் இயக்குனர் என்பதால் எல்லா எதிர்வினைகளும் “ஹிட்லர் காலத்தில் யூதர்கள் பட்ட இன்னல்களை வெளிப்படுத்திய ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் திரைப்படத்துக்கு இணையானதல்லவா காஷ்மீர் ஃபைல்ஸ்! இதைப் போய் விமர்சிக்கலாமா” என்ற ரீதியில்தான் அமைந்துள்ளது.  தூதரும் அதைத்தான் சொல்கிறார்.

இதைக் கேள்விப்பட்டால் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தற்கொலை செய்வார் என்பது வேறு விஷயம்.

சங்கிகளுக்கும் சரி, தூதருக்கும் சரி, சுய புத்தியே கிடையாதா? பாஜக ஐ.டி விங் எழுதித் தருவதை அப்படியே ட்வீட்டுவார்களா? சின்ன மாற்றம் கூட செய்ய மாட்டார்களா! ஒரே ஸ்க்ரிப்டை எத்தனை முறை படிப்பது!

அனுபம் கேர் கொஞ்சம் பரவாயில்லை. கூடுதலாக, சித்தி வினாயகர் அவரை தண்டிப்பார் என்று சபித்துள்ளார். சித்தி வினாயகருக்கு வேறு வேலையே கிடையாதா! பண்டிட்டுகளை வெளியேற்ற முயற்சிகள் நடந்த போதே அதற்கு காரணமாக இருந்தவர்களை அப்போதே தண்டித்திருந்தால் “காஷ்மீர் ஃபைல்ஸ்” ப்டத்துக்கே அவசியம் வந்திருக்காதே. அப்பட இயக்குனர் 18 கோடியில் அபார்ட்மெண்ட் வாங்கியிருக்க முடியாதே!

பிகு : ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படத்தை இயக்க ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஊதியமே பெறவில்லை என்றும் இந்த இயக்குனர் அக்னிஹோத்ரி 18 கோடி ரூபாயில் மும்பையில் அபார்ட்மெண்ட் வாங்கினார் என்ற தகவலை சொன்னது யார் தெரியுமா?

 நீங்கள் நம்பாவிட்டாலும் சொல்கிறேன்.

 .

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.


.

.

.

.

.

.

சுமந்து . . .

 

 

No comments:

Post a Comment