நேற்று ஒரு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி திரு கே.எம்.ஜோசப், தன் கவலை ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
"2004 ம் வருடத்திற்குப் பிறகு நியமிக்கப்படுகிற தலைமை தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் மிகவும் குறுகியதாக உள்ளது. அதனால் அவர்களால் எந்த உறுதியான முடிவும் எடுக்க முடியாமல் ஒன்றிய அரசு என்ன சொல்கிறதோ, அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளாக மாறி விடுகிறார்கள். தேர்தல் ஆணையத்தின் சுயேட்சையான தன்மையும் இதனால் பறி போய் விடுகிறது. 2004 முதலான பத்தாண்டுகளில் ஆறு பேரும் கடந்த ஏழு ஆண்டுகளில் ஏழு பேரும் தலைமை தேர்தல் ஆணையர்களாக இருந்துள்ளனர். "
அப்படித்தான் ஆட்சியாளர்கள் இருப்பாங்க ஜட்ஜய்யா, அதுதானே அவங்களுக்கு வசதி!
உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் அப்படித்தான் நியமிக்கனும்னு ஆசைப் படறாங்க! அதனாலதான் உங்க கொலோஜியம் முறையை மாத்த துடிக்கறாங்க!
No comments:
Post a Comment