Thursday, November 10, 2022

தேஷ் பக்தாளுக்கு வாய்ப்பில்லாமல் போச்சே!

 


நல்ல வேளை! இன்று இந்தியா இங்கிலாந்திடம் தோற்றுப் போனது. இந்தியா பாகிஸ்தான் இறுதிப் போட்டி நடந்திருந்தால் என்ன ஆகும்?

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் போன்றதொரு வெறி கிளப்பப் பட்டிருக்கும்!

கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்திருக்கும்!

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோணல் மாணலான பாலியஸ்டர் கொடிகள் தூசி தட்டப்பட்டு வீடுகளில் பறந்திருக்கும்.

பாகிஸ்தானை வெற்றி பெறுவது மோடியின் கௌரவப் பிரச்சினை என்று இந்திய வீரர்களுக்கு நெருக்கடி அளிக்கப்பட்டிருக்கும்.

ஒரு வேளை இந்தியா வெற்றி பெற்றிருந்தால்

இது மோடியின் சாதனை என்று பீற்றிக் கொள்ளப்பட்டிருக்கும்.

பாகிஸ்தானை வென்ற வீர மகன் என்று அமித்ஷா மகனுக்கு பட்டம் கொடுக்கப்பட்டிருக்கும்.

சங்கிகளின் தேஷ் பக்தி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியிருக்கும். 

இன்று சொதப்பியது போல அன்றும் சொதப்பி தோற்றிருந்தால்

தேச பக்தி இல்லாத கிரிக்கெட் வீரர்கள் என்று அனைவரையும் கழுவி கழுவி ஊற்றியிருப்பார்கள்.

உங்களால் மோடிக்கு இழுக்கு என்று வசை பாடியிருப்பார்கள்.

அணியில் 11 பேரும் சொதப்பியிருந்தாலும் கூட அணியில் யாராவது ஒரு இஸ்லாமிய வீரர் இருந்திருந்தால் அவர் பரம்பரையையே அசிங்கப் படுத்தி இருப்பார்கள். தூக்கு தண்டனை தர வேண்டும் என்று தீர்ப்பளித்திருப்பார்கள்.

பாகிஸ்தான் அணி நன்றாக விளையாடியது என்று யாராவது வாய் திறந்தால் அவர்களுக்கு தேசத்துரோகி பட்டம் கட்டி பாகிஸ்தானுக்கு போகச் சொல்லி இருப்பார்கள்.

இது போல எந்த சம்பவமும் நடக்காதது நல்லதுதான்.

இந்திய அணிக்கு அச்சம் இருந்ததா என்று தெரியவில்லை. தோற்றுப் போய்விடுவோம் என்று சங்கிகளுக்கு அச்சம் இருந்திருக்கிறது. அதை சுமந்துவின் ட்வீட் உணர்த்துகிறது. 



"மேய்க்கிறது எருமை! இதிலென்னய்யா பெருமை " என்று அவருக்கு பதிலும் போட்டு விட்டேன்.

இந்தியா வென்றிருந்தால் இந்த சங்கி எப்படி குதித்திருக்கும்! அந்த விபத்தை தவிர்த்த இந்திய அணிக்கு நன்றி.


No comments:

Post a Comment