Saturday, November 26, 2022

மோடியின் திமிரன்றி வேறில்லை

 


அருண் கோயல் என்ற ஒன்றிய அரசு செயலாளர் வெள்ளிக்கிழமை அன்று விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம் கொடுக்கிறார். அன்றே அது ஏற்கப்பட்டு மலை பணி ஓய்வு பெறுகிறார்.

 மே மாதம் முதல் காலியாக இருந்த ஒரு தேர்தல் ஆணையர் பதவிக்கான அறிவிக்கை சனிக்கிழமை காலை வெளியாகிறது. அன்று மாலையே அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். திங்கள் கிழமை காலை அவர் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கிறார்.

 எல்.ஐ.சி மாதிரியான நிறுவனங்களில் ஒரு உதவியாளர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம் அளித்தால் மூன்று மாதம் நோட்டீஸ் காலம் உண்டு. அதற்கு முன்பாக அவர் மீது ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதா, இல்லையா என்று விஜிலன்ஸ் பிரிவு சான்றிதழ் அளிக்க வேண்ட்டும். அவர் அவசியம் விருப்ப ஓய்வில் சென்றுதான் தீர வேண்டுமா என்று ஒரு உயர் அதிகாரி ஒரு நேர்காணல் நடத்திட வேண்ட்டும். அதன் பின்புதான் அவர் விருப்ப ஓய்வில் செல்ல முடியும். பெரும்பாலான நிறுவனங்களில் இதுதான் நடைமுறையில் உள்ளது, தனியார் நிறுவனங்களில் கூட மூன்று மாத விதி உண்டு.

 ஆனால் எனக்கு இந்த வேலை வேண்டாம் என்று சொல்கிற ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி அன்றே விடுவிக்கப்படுகிறார். ஆறு மாதமாக நியமிக்கப்படாத  தேர்தல் ஆணையர் பதவிக்கான அறிவிக்கை மறு நாளே வெளியிடப்பட்டு ஒருவரிடம் மட்டும் விண்ணப்பம் பெற்று அவர் அன்றே நியமனம் பெறுகிறார்.  தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யக் கூட காலவரை உண்டு. ஆனால் தேர்தல் ஆணையர் பதவிக்கு அதுவெல்லாம் பொருந்தாது போல.

 ஒரு சரியான தலையாட்டி பொம்மையை கண்டு பிடிக்க ஆறு மாத காலம் ஆகியுள்ளது போல.

 அப்படி ஒரு விசுவாசியை, எடுபிடியை, அடிமையை கண்டுபிடித்த உடன் அந்த பணியில் அமர்த்துகிறார்கள் என்றால் ஜனநாயகத்தை இவர்கள் எச்.ராசாவின் ஐகோர்ட்டாகத்தான் மதிக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்ற மோடியின் திமிர் தவிர வேறென்ன இது!

 தன்னுடைய தேர்தல் தில்லுமுல்லுகளுக்கு உகந்த ஒரு ஆளை தேர்தல் ஆணையராக நியமித்ததே மோடியின் பயத்தைத்தான் காண்பிக்கிறது. பொய்களை மட்டும் நம்பி தேர்தலில் இனியும் வெற்றி பெற முடியாது என்ற பயம்தான்.

 பார்ப்போம், இந்த பிரச்சினையை கையிலெடுத்துள்ள உச்ச நீதிமன்றம் என்ன செய்கின்றது என்று

No comments:

Post a Comment