நேற்று முகநூல் முழுதுமே
ஆஜான் எனும் அறை கலனை (அதாங்க ஃபர்னிச்சர்)
சுக்கு நூறாக உடைத்தெறிந்த பதிவுகளாகவே
இருந்தது.
“ஃபர்னிச்சர் என்பதற்கு
அறை கலன் என்ற வார்த்தையை நான்தான் உருவாக்கினேன். நான் தமிழுக்கு கொடுத்த கொடை அந்த
வார்த்தை”
என்று மிகுந்த திமிரோடு
பேச அரை மணி நேரத்திற்குள்ளாக ஆஜானை முச்சந்தியில் நிறுத்தி கரும்புள்ளி செம்புள்ளி
குத்தி கழுதையின் மீது உட்கார வைத்து விட்டார்கள்.
சில பதிவுகள் உங்கள் பார்வைக்காக.
மனுஷ்ய புத்திரன்
Furniture க்கு ' அறை கலன்' என்ற சொல் 1994 ல் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட ஆட்சிச் சொல்லகராதி ஆறாம் பதிப்பில் இடம் பெற்றுள்ளது. ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது. 1994 ல் வெண்முரசு எழுதப்படவில்லை. அறைகலன் ஜெயமோகனின் சொல்லும் அல்ல.
என் வேண்டுகோளுக்கிணங்க இதைக் கண்டுபிடித்துத் தந்த பெருமாள் முருகனுக்கு நன்றிகள்.
நாங்கள் இவ்வளவு அலர்ட்டா இருக்க காலத்திலேயே இவ்வளவு துணிச்சலா கதை விட்டால் எப்படி?
சூர்யா சேவியர்
சாய் லட்சுமிகாந்த்
ஊருக்கு எல்லாம் பாடம் நடத்தும் சுயமோகனின் திருட்டத்தனம் அம்பலம்..
------------------------------------------------------------------2005 ஆம் அண்டு எஸ் ஜே சூர்யாவின் அன்பே ஆருயிரே படம் வெளியானது. அப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் Best friend, சுருக்கமாக BF. இந்த ஆங்கிலப் பெயரை மாற்றச் சொல்லி மருத்துவர் ராமதாஸ், தொல். திருமாவளவன் போன்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அப்படத்தில் பெயர் அன்பே ஆருயிரே என மாற்றப்பட்டது. சுருக்கமாக அ ஆ. அந்த கோபத்தில் படத்தின் டைட்டில் கார்டு முழுமையும் ஆங்கிலத்தில் வரும்படி செய்திருப்பார் எஸ்ஜே சூர்யா. அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு எங்கும் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என பல போராட்டங்களும் நிகழ்ந்தன.
2007, 2008 ஆம் ஆண்டுகளில் பர்னிச்சர் விற்கும் பல கடைகள் தங்கள் நிறுவன பெயரை தமிழில் வைக்க நினைத்து அறைக்கலன் எனும் வார்த்தையைப் பயன்படுத்தினர். அதற்கு முன்னரும் அப்பெயரை கேள்விப்பட்டிருந்தாலும், உறுதியாகக் கூற வேண்டும் என்றால் 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு அறைக்கலன் எனும் வார்த்தைப் பயன்பாட்டை பல வணிக நிறுவனங்களில் கண்டுள்ளேன். நீங்களும் கண்டிருக்கலாம்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் 22.03.2014 அன்று தனது இணையதளத்தில் “அறைக்கலன்” எனும் வார்த்தை பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் உள்ள சில பகுதிகள்….
//Furniture’ விற்கும் கடைகள் ஏராளம் இருக்கின்றன. கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்னும் விதியை அரசு கறாராக அமல்படுத்தியபோது ‘Furniture’ கடைகள் எல்லாம் ‘அறைகலன்கள்’ என்னும் பெயர் பூண்டன. இச்சொல்லை உருவாக்கியவர்கள் யாரெனத் தெரியவில்லை. தமிழ் வளர்ச்சித் துறையினர் உருவாக்கிய சொல்லாக இருக்கலாம். இச்சொல் குறித்துச் சிந்திக்க ஒரு வாய்ப்பு எனக்குச் சென்ற ஆண்டு உருவாயிற்று.//
// காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. சுகுமாரன் மொழிபெயர்ப்பில் உருவான அந்நாவலின் மொழிநடையைச் செம்மை, மெய்ப்பு ஆகியவற்றிற்காக மூன்று நாள் நாகர்கோவிலில் தங்கினேன்…… அந்நாவலில் ‘Furniture’ என்னும் சொல்லுக்கு ‘அறைகலன்’ எனச் சுகுமாரன் பயன்படுத்தியிருந்தார். அச்சொல் பற்றிய என் கவனம் அதற்கு முன் நேரவில்லை.//
(தனிமையின் நூறு ஆண்டுகள் - மொழிபெயர்ப்பு நூல், காலச்சுவடு பதிப்பகம், ஜூன், 2013ல் வெளியானது)
இச்சொல்லைப்பற்றி அரசுத்துறையில் பணிபுரிபவர்களிடம் கேட்கும் போது
//ஆட்சிமொழிக் காவலர் என்று பாராட்டப் பெற்ற கீ. இராமலிங்கனார் 1968ஆம் ஆண்டு எழுதிய “ஆட்சித் துறைத் தமிழ்” என்னும் நூலில் FURNITURE என்பதற்கு “அறைகலன்” என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார் //
என்று ஒரு தகவலும் கிடைக்கிறது. இதன் உண்மை நிலையை யாரேனும் உறுதிப்படுத்தினால் மகிழ்வேன்.
1991-96 காலகட்டத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மீது, தமிழ்நாடு சிறுதொழில்கள் கழகத்தின் நிலத்தை முறைகேடாக வாங்கியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. டான்சி நிலபேர வழக்கு எனக் கூறினால் பலருக்கும் நினைவுக்கு வரும். அந்த டான்சி நிறுவனத்தின் கீழ் வரும் ஒரு தொழிற்சாலையின் பெயர் “டான்சி அறைகலன் தொழிலகம்”. சென்னை கிண்டியில் உள்ளது.
இவைகளின் மூலம் 2014ம் ஆண்டுக்கு முன்னரே அறைக்கலன் / அறைகலன் எனும் சொல் தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்தது. அதுவும் வணிக நிறுவனங்கள் பயன்படுத்துமளவு பிரபலமாகவும் இருந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது. 2014க்கு முன்னர் பல நாளேடுகளிலும் அவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஜெயமோகன் என்பவர், ஒரு காணொளியில் அந்தச் சொல்லை தான் 2014 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கிய வெண்முரசு எனும் நாவலில் அதைப் பயன்படுத்தியதாகவும், அங்கிருந்து அது wiktionary சென்றதாகவும், அதன் பிறகு அந்த சொல் புகழ்பெற்று மக்களின் பழக்கத்திற்கு வந்ததாகவும், அந்தச் சொல்லை கண்டுபிடித்தது “நான் தான்” என்றும் போகிற போக்கில் கூச்சமே இல்லாமல் பொய் சொல்கிறார்.
உண்மையில் வெண்முரசு எனும் நூலில் இந்த வார்த்தையை இவர் முதன்முதலில் உருவாக்கிப் பயன்படுத்தியிருந்தால் அதைத் தகுந்த தரவுகளுடன் நிறுவுதல் வேண்டும். அதற்கு முன்னர் அவ்வார்த்தை புழக்கத்தில் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதன் பின்னரே அதற்கான பெருமையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் எவரோ கண்டறிந்து, பல காலமாக புழக்கத்தில் இருக்கும் ஒரு சொல்லுக்கு ஜெயமோகன் உரிமை கோருகிறார்.
விழித்திருக்கும் போதே கண்ணுக்கு எதிரே திருடுபவர்கள் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இப்போதுதான் நேரடியாகப் பார்க்கிறேன். எனது இன்னொரு கவலை, எளிதில் கண்டுபிடிக்க முடிந்த விசயங்களிலேயே இவ்வளவு பொய்களை அள்ளி வீசுகின்றாரே, மற்ற விசயங்களில் இவரது நேர்மை எப்படி இருக்கும்?
இப்படி எல்லாம் பொய்யாகப் பேசி, புரளிகளை பரப்பி, இல்லாத பெருமைக்கு சொந்தம் கொண்டாடி, அடிப்பொடிகளை வைத்து டுபாக்கூர் விக்கியில் பதிந்து, அதை வரலாறாக மாற்றி, வீடியோவாக எடுத்து பிரபலம் அடைய முயல்பவர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்கிறேன்.
இதற்கு பதில் யூடியூபில் ஃபுட் ரிவ்யூ செய்து “வேற லெவல் ப்ரோ” என வீடியோ வெளியிடலாமே. அதிக வியூஸ் கிடைக்கும். சீக்கிரமே பிரபலம் ஆகிவிடலாம். சோற்றுக்கும் பிரச்சனை இல்லை. சமூகத்திற்கும் தீமை இல்லாமலும் அமையும்.
இதற்கெல்லாம் ஆஜான்
கவலைப்படுவார் என்று நினைக்கிறீர்களா என்ன?
“நெஞ்சம் உண்டு, நேர்மை
உண்டு” படத்தில் அரசியல்வாதியாக வரும் நாஞ்சில் சம்பத் சொல்லும் வஜனம் ஆஜானுக்குத்தான்
பொருந்தும்.
“துப்பினா தொடைச்சுக்குவேன்”
என்று சொல்லி அடுத்து என்ன கதை அளக்கலாம் என்று திட்டமிடத் தொடங்கிடுவார்.
ஆனால் ஒரு அபாயம்
உள்ளது. எப்படி துடைத்துக் கொண்டேன் என்று இருபது பக்கத்துக்கு ஒரு கட்டுரை எழுதி விடுவார்.
No comments:
Post a Comment