Tuesday, November 15, 2022

நேரு இல்லையேல் மோடியில்லை.

 


ஆமாம். நிஜம்தான்.


நேரு இல்லாமல் மோடியால் என்று எதுவுமே செய்ய முடியாது.

நேரு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியிருக்காவிட்டால் அவற்றை மோடி எப்படி விற்க முடியும்! எப்படி அந்த பணத்தில் ஊதாரித் தனமாக செலவழிக்க முடியும்!


நேரு தொலை நோக்குப் பார்வையோடு துறை முகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றை உருவாக்கியிருக்காவிடில் மோடியால் எப்படி அவற்றை தன் நண்பன் அதானிக்கு தாரை வார்க்க முடியும்!

 

நேரு ஏர் இந்தியாவை உருவாக்கியதால்தான் அதனை மோடியால் டாடாவிற்கு தாரை வார்க்க முடிந்தது.

 

நேரு உருவாக்கிய எல்.ஐ.சி யின் பங்குகளை மோடியால் விற்க முடிந்தது.

 

இவை மட்டுமா, மோடி தன்னுடைய கையாலாகததனத்திற்கு பழி போட கிடைத்த பெரிய பொக்கிஷமல்லவா நேரு!

 

நேரு மட்டும் இல்லையென்றால் இன்று மோடியின் பிழைப்பே நடக்காது.

 

ஆனாலும் சங்கிகளுக்கு ஏன் நேரு மீது கடுப்பு?

 

சங்கிகள் இந்தியாவை அவர்கள் நினைத்தது போல

 

ஒரே நாடு-ஒரே மதம்-ஒரே மொழி- ஒரே கலாச்சாரம்

 

என்று திணிக்க முடியாத அளவிற்கு இந்தியாவின் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தையும் மதச்சார்பின்மையையும் மக்களின் மனதில் விதைத்து விட்டுப் போயிருக்கிறாரே! அவரை எப்படி சங்கிகள் ஏற்றுக் கொள்வார்கள்!

 

பாஜக யாரையெல்லாம் வெறுக்கிறதோ, அவர்களையெல்லாம் நாம் உயர்த்திப் பிடித்திட வேண்டும்.

 

பிகு: கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் நேருவின் புகைப்படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் சபாநாயகர், மாநிலங்களவைத் தலைவர், ஒன்றிய அமைச்சர்கள் என யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்த வருடமும் கலந்து கொண்டது போல தெரியவில்லை. பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் எந்த செய்தியும் இல்லை. அதே நேரம் நரேந்திர மோடியின் பக்கத்தில் இரு வரி செய்தி உள்ளது. 



ஆனால் அதற்கு வந்துள்ள பின்னூட்டங்கள் படு கேவலமாக, நேருவை இழிவு படுத்துவதாகவே அமைந்துள்ளது. சங்கிகளின் புத்தி வேறெப்படி இருக்கும்!

3 comments:

  1. "ஆனாலும் சங்கிகளுக்கு ஏன் மோடி மீது கடுப்பு?" "மோடி" யை "நேரு" என்று பிழை திருத்தவும், நன்றி, அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. நன்றி. திருத்தி விட்டேன்

      Delete
  2. "நேரு மட்டும் இல்லையென்றால் இன்று மோடியின் பிழைப்பே நடக்காது". Endru migasariyaaga solli irukkireergal

    ReplyDelete