Friday, November 18, 2022

அதெல்லாம் முடியாது ஜட்ஜய்யா

 



கடந்த இரண்டு மூன்று நாட்கள் வீட்டில் சரியாக இல்லாததால் அந்த நாட்களின் நாளிதழ்களை நேற்று இரவுதான் படித்தேன்.

 

அப்போது கண்ணில் பட்ட செய்தி “உச்ச நீதிமன்றத்தின் கோபம்”

 

“நீதிபதிகள் நியமனத்தில் ஒன்றிய அரசு அலட்சியம் காண்பிக்கிறது. தேவையில்லாமல் கால தாமதம் செய்கிறது. கோலோஜியத்தின் பரிநுரைகளை ஏற்றுக் கொண்டோம் என்றோ நிராகரிக்கிறோம் என்றோ சொல்லாமல் கியப்பில் போட்டு வைத்துள்ளது. உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றத்திற்குமான நீதிபதிகள் காலியிடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. திறமையான பல வழக்கறிஞர்கள் நீதிபதியாக வர இசைவு கொடுத்தாலும் இந்த கால தாமதத்தால் அவர்கள் பின் வாங்கும் நிலை ஏற்பட்டு விட்டது”

 

இவ்வாறு நீதிபதிகள் வெடித்துள்ள போதும் மோடி அரசு வேகமாக செயல்படும் என்று எதிர்பார்க்கிறீர்களா என்ன?

 

நோ, நெவர் . . .

 

கொலோஜியம் (இந்த முறை குறைபாடானது, அதை மாற்ற வேண்டும் ) யார் நன்றாக நீதி வழங்குவார்கள் என்று யோசித்து பரிந்துரை கொடுத்திருக்கலாம். அதற்காக மோடி அரசால் அதனை அப்படியே ஏற்க முடியுமா என்ன?

 

பரிந்துரைக்கப்பட்டவருக்கு ஆர்.எஸ்.எஸ் பின்புலம் இருக்க வேண்டும், ஆட்சியாளர்களின் அராஜகங்களை கண்டு கொள்ளாதவர்களாக இருக்க வேண்டும். நீதிமன்றப்பணிக்குப் பிறகு எம்.பி ஆக, கவர்னராக, தூதுவராக வேலை செய்யுமளவுக்கு தகுதியான தீர்ப்புக்களை சங்கிகளுக்கு ஆதரவாக வழங்கக் கூடியவரா என்று ஆராய வேண்டும். நீதி, நேர்மை, நியாயம், நாணயம், அரசியல் சாசனத் தெளிவு போன்ற தீய குணங்கள் இருக்கக் கூடாது.

 

ஜட்ஜய்யா, நீங்க “மனிதன்” திரைப்பட நீதிபதி ராதாரவி மாதிரி பேப்பர் வெயிட்டை தூக்கி சட்ட அமைச்சர் மேல தூக்கிப் போடலாங்கற அளவுக்கு போனாலும் கூட நீங்கள் நினைப்பது போல எல்லாம் நடக்காது ஜட்ஜய்யா!

 

வழக்குகள் தேங்கிப் போகும் அவ்வளவுதானே! அது கிடக்குது கழுதை.

பிகு: எழுதி மூன்று நாளானாலும் ஆஜானால் தாமதமாகி விட்டது.                                                                         

 

No comments:

Post a Comment