Wednesday, November 9, 2022

முன்னேற்றம் போதுமா ஆட்டுத்தாடி?

 


இன்றைய ஆங்கில இந்துவில் மூன்றாம் பக்கத்தில் ஒர் செய்தி.

 


ஆரோவில் வளாகத்தில் வசிக்கிற ஒரு ஜெர்மன் தம்பதி வீட்டில் சோதனை இட்டதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று பழமையான வெங்கலச் விக்கிரகங்கள் பதுக்கி வைக்கப்பட்டது தெரிந்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

 இந்த செய்தியை படித்து விட்டு அடுத்த பக்கத்தை புரட்டினால்

 ஆரோவில்லின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக ஆட்டுத்தாடி ரவி விடுத்த வேண்டுகோள். 3000 குடும்பங்கள் உள்ள ஆரோவில்லில் ஒற்றுமை இல்லையென்றால் எப்படி? இங்கே முன்னேற்றம் வேண்டாமா என்றெல்லாம் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.



 ஏற்கனவே போதைப் பொருள் கடத்தலில் மையமாக ஆரோவில் திகழ்கிறது என்றொரு குற்றச்சாட்டு உண்டு. அதனை ஆட்டுத்தாடியும் ஒப்புக் கொண்டிருக்கிறது.

 போதைப் பொருள் கடத்தலில் இருந்து அடுத்த கட்ட முன்னேற்றமாக சிலைக் கடத்தல் நடந்துள்ளது.

 இதற்கு மேல் என்ன முன்னேற்றம் வேண்டும் ரவி?

 மூன்றாம் பக்க செய்தியைப் படித்து விட்டு நான்காம் பக்கத்து செய்தியை படிக்கையில் நல்ல காமெடியாகவே இருந்தது.

 

 

No comments:

Post a Comment