Saturday, November 19, 2022

வாட்டி வதைக்கும் வந்தே பாரத்

 


செல்லா நோட்டு போல, ஜி.எஸ்.டி போல, லாக் டவுன் போல அவசர கதியில் அறிமுகம் செய்யப்பட்டது வந்தே பாரத் டிரெயின்கள்.

பசு மாடுகள், எருமை மாடுகள் மோதினால் சேதமடைந்து கொண்டிருந்த ட்ரெயின் இப்போது கன்றுக்குட்டி மோதினாலே சேதமடைந்து விடுகிறது.

இன்று பெங்களூர், சென்னை வழியில் செல்லும் எல்லா ரயில்களும் நான்கரை முதல் ஐந்து மணி நேரம் தாமதமாக சென்றுள்ளது. காட்பாடி ரயில் நிலையம் காத்திருந்த பயணிகளுக்கு பெரும் அவஸ்தையாகி இருக்கிறது. திட்டமிட்டபடி பயணத்தை தொடர முடியவில்லை. முன்பதிவு செய்தவர்கள் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென்றால் பெரும் பண இழப்பு.

தாமதத்திற்கு வந்தே பாரத் ட்ரெயின் காரணமாக இருந்திருக்கிறது.

கேரளாவில் தண்டவாளத்துக்கிடையில் வரும் யானைகள்தான் சிதறிப் போயிருக்கிறதே தவிர ரயிலுக்கு சேதமேற்பட்டதில்லை.

ஆனால் வந்தே பாரத்திற்கு சேதமாகிறதென்றால் கோளாறு அதன் உருவாக்கத்தில்தான் இருக்கிறது.

அதை சரி செய்யாமல் வந்தே பாரத்தை தொடர்ந்து இயக்குவதென்பது மிகப் பெரிய அபாயமாகும். பயணிகளின் உயிரோடு விளையாடுகிற ஆட்டத்தை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்.

மோடியின் கௌரவத்தை விட பயணிகளின் உயிர் முக்கியம். 

No comments:

Post a Comment