நேற்று ஒரு தோழர் கீழே உள்ள புகைப்படத்தை மட்டும் அனுப்பி இருந்தார்.
யார் இவர் என்று கேட்டதற்கு இவர் பெயர் பிரதிக்சா டோண்ட்வாக்கர் என்றும் இந்த வருடம் ஸ்டேட் வங்கியில் உதவி பொது மேலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்று சொன்னார்.
அதானிக்கு கடன் கொடுத்து இன்று அம்பானி கம்பெனியில் வேலை பார்க்கும் அருந்ததி பட்டாச்சார்யா ஸ்டேட் வங்கியின் சேர்மனாகவே இருந்திருக்கிறாரே, இவருக்கென்ன சிறப்பு என்று வினவினேன்.
அப்போதுதான் இந்த தகவலை அனுப்பினார்.
ஏழாம் வகுப்பு படிப்போடு பகுதி நேர துப்புறவாளராக ஸ்டேட் வங்கியில் பணியில் சேர்ந்து கல்வித்தகுதியை வளர்த்துக் கொண்டு சார் பணியாளர், கிளார்க், அதிகாரி என்று தன் முயற்சியால் படிப்படியாக முன்னேறியது என்பது மிகப் பெரிய சாதனை.
சாதனைப் பெண்மணிக்கு வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment