Sunday, June 12, 2022

பேரனையும் கொல்வார் ஜெமோ

 தமிழின் முதன்மையான எழுத்தாளர் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் புளிச்ச மாவு ஜெமோ எழுதியுள்ள  நீண்ட கட்டுரையின் மிகச் சிறிய வாக்கியங்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். 



னக்கு மிகப்பெரிய குறை உள்ளது நம் குழந்தைப் பயணிகள் பற்றி. அதிலும் சென்ற பத்தாண்டுகளாகவே இக்குறை உள்ளது. 

இப்போது வரும் குழந்தைகள் முற்றிலும் வேறுவகை. இரண்டு அடிமைகளை உடனழைத்துவரும் மனநலம் குன்றிய எஜமானன் போலிருக்கின்றன நம் குழந்தைகள். 

காசர்கோடு செல்லும் ரயிலில் ஒரு குழந்தை நள்ளிரவில் சோடா வேண்டும் என்று கூவி அழுதது. கையில் கிடைத்தவற்றை தூக்கி வீசியது. அதன் அப்பா அம்மா இருவரும் அதனிடம் கெஞ்சினர். மன்றாடினர். அது வெறிகொண்டு கூச்சலிட்டுக்கொண்டே இருந்தது. 

எர்ணாகுளத்தில் அதன் அப்பா வெளியே ஓடி மூச்சிரைக்க திரும்பி வந்து ஒரு கோக் புட்டியை அதற்கு கொடுத்தார். அதை ஒருவாய் குடித்துவிட்டு வேண்டாம் என்றது. ரயில் கிளம்பி பத்தே நிமிடத்தில் லேய்ஸ் வேண்டும் என்று கூச்சல்.

நேற்று நாகர்கோயில் ரயிலில் ஒரு குழந்தை மேல் பெர்த்தில்தான் படுப்பேன் என கூச்சலிட்டது. இரண்டு வயதுதான் இருக்கும். அதன் அப்பாவும் அம்மாவும் கெஞ்சிக்கொண்டே இருந்தனர். பொறுமையை மிகமிகத் திரட்டிக்கொண்டேன். எனக்கு நல்ல சளி பிடித்திருந்தது. பகலில் தூங்கவில்லை. ஆகவே தூங்கிவிட்டேன். 

ஆனால் நள்ளிரவில் அந்தக்குழந்தை மீண்டும் கூச்சலிட்டபோது விழித்துக்கொண்டேன். அது தூக்கு என்னை தூக்கு என்று கூவியது. அதை அதன் அப்பா தூக்கிக்கொண்டு வெளியே சென்றார். தூக்கி உள்ளே கொண்டுசெல் என்று மீண்டும் கூச்சல்.

இந்தப்பெற்றோர் குழந்தைகளை ஏதோ அரிய பொக்கிஷம் என நினைக்கிறார்கள். அப்படி நாமும் நினைப்போம் என நம்புகிறார்கள். ஒரு சிறு முகச்சுளிப்பு எழுந்தால்கூட திகைக்கிறார்கள். உலகுக்கே அரிய செல்வமான தங்கள் குழந்தைமேல் ஒருவர் அதிருப்தி கொள்ளக்கூடுமா என்ன?

பெரும்பாலான குழந்தைகளின் முகங்கள் எப்போதும் அதிருப்தியும் சிணுங்கலும் கொண்டவையாக இருக்கின்றன. இந்த உலகத்தையே அளித்தாலும் அவற்றால் மகிழ்ச்சி அடைய முடியாது என்று தோன்றுகிறது. நான் அந்தக்குழந்தைக்காகவே பரிதாபப்படுகிறேன். 

இன்னொருவரும் பொறுமையிழந்திருந்தார்போலும். அவர் “சார், இப்பல்லாம் ரயில்வேயிலே அஃபிசியலா அறிவிச்சிட்டான். சின்னப்புள்ளைங்க சும்மா சும்மா கத்தினா கம்ப்ளெயிண்ட் பண்ணலாம்… பேரண்ட்ஸை எறக்கி விட்டிருவான்… கம்ப்ளெயிண்ட் பண்ணுங்க”

அதில் அந்த குழந்தையின் அம்மா கொஞ்சம் பயந்துவிட்டாள். “அவன் அப்டித்தான்… சொன்னா கேக்கமாட்டான்…”

“நாங்களும்தாம்மா புள்ள வளத்திருக்கோம்… அப்ப புடிச்சு பாக்குறேன். என்னமோ கொஞ்சிட்டே இருக்கீங்க” என்றவர் சட்டென்று அந்தக்குழந்தையிடம் “டேய் மறுபடி சத்தம்போட்டே அறைஞ்சிருவேன் பாத்துக்க” என்றார்.

குழந்தை திகிலுடன் அமைதியடைந்தது. அதன்பின் காலைவரை அமைதி. ‘அப்பன் அடிக்காதவனை ஊர் அடிக்கும்’ என்ற மலையாளப் பழமொழியை நினைத்துக்கொண்டேன்.

நாம் நம் குழந்தைகளை ஒருவகை மனநோயாளிகளாக வளர்த்துக்கொண்டிருக்கிறோமா?

ரயிலில் தூக்கம் கெட்டுப் போய்விட்டது என்பதற்காக குழந்தைகளை மன நோயாளி என்று அழைக்கிற இந்த ஜந்துவை மன நோயாளி என்று சொல்வது சரிதானே!

அழகியல், அழகியல் என்று எப்போதும் எழவெடுக்கும் சுயமோகனே, குழந்தைகளைக் காட்டிலும் மிகப் பெரிய அழகு ஏதேனும் உண்டோ?

ஜெயமோகனின் மகன் அஜிதன் திருமணம் முடிந்ததும் தனிக் குடித்தனம் செல்வது நல்லது. ஒரு நாள் தூக்கம் கெட்டதற்கே குழந்தைகளை மன நோயாளி என்று வ்சைபாடும் ஒவ்வொரு நாளும் அழும் தன் பேரக் குழந்தைகளை கொல்லக் கூட தயங்க மாட்டார். 


No comments:

Post a Comment