மகாராஷ்டிர அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். உத்தவ் தாக்கரே தன் வீட்டிற்கே வந்து விட்டார்.
அவர் கட்சி எம்.எல்.ஏ க்கள் முதலில் பாஜக ஆளும் மாநிலமான குஜராத்திற்கு சென்றார்கள், இப்போது அங்கிருந்து பாஜக ஆளும் இன்னொரு மாநிலமான அஸ்ஸாமிற்கு சென்றுள்ளனர்.
அவர்களின் ஒரே கோரிக்கை சிவசேனா தற்போதைய என்.சி.பி, காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகி பாஜக கூட்டணியில் இணைய வேண்டும். அதற்காகத்தான் இப்போது புரட்சி, போராட்டம் எல்லாமே . . .
ஆனால் பாஜக சொல்கிறது
"சிவசேனாவில் நடப்பதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நாங்கள் எதுவும் தூண்டவில்லை. அவர்களாகவே தூண்டப்பட்டார்கள்"
"ஆமாம். எங்களோடு கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்ட கட்சி, எங்களை கழட்டி விட்டு ஆட்சி செய்வது பிடிக்கவில்லை"
"தேவேந்திர பட்னாவிஸிற்கு முதல்வர் பதவியில்லாமல் இருக்க முடியவில்லை"
என்றெல்லாம் நேர்மையாக சொல்ல முடியாத அளவிற்கு அயோக்கியர்கள் அவர்கள்.
கேட்பவன் கேணையனாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் கதை அளக்கலாம் என்ற எண்ணம்தான். கேணையர்களுக்கும் பஞ்சம் இல்லா தேசமல்லவா இது?
No comments:
Post a Comment