Wednesday, June 15, 2022

ராணுவத்துக்கு ஆளெடுங்கள், கூலிப்படைக்கல்ல . . .

 


நேற்று முன் தினம் மோடி ஒன்றரை ஆண்டில் பத்து லட்சம் பேருக்கு அரசுத் துறைகளில் வேலை என்று அறிவித்த போது அதை வழக்கமான ஜூம்லா என்றுதான் நினைத்திருந்தேன்.


ஆனால் ராணுவத்துக்கு ஆளெடுக்கும் புதிய கொள்கையை படித்த பின்பு மோடியின் அறிவிப்பு ஜூம்லாவாக இருப்பதே மேல் என்று தோன்றியது.

நான்கு வருட ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆள் எடுப்பார்கள், வெறும் தொகுப்பூதியம்தான். நான்கு வருடத்திற்குப் பிறகு 75 % பேர் வீட்டுக்கு அனுப்பப்பட 25 % பேர் மட்டும் தொடர்வார்கள்.

வீட்டுக்கு வந்தவர்கள் நிலை ????

தொகுப்பூதியத்தில் பிடிக்கப்படும் தொகைக்கு இணையான தொகையை அரசு கொடுக்குமாம். அதை வைத்துக் கொண்டு தொழில் தொடங்க வேண்டுமாம். 

மாத தொகுப்பூதியம் 25,000 என்று ஒரு செய்தி படித்தேன். 10 % பிடித்து அரசும் அதே தொகையை கொடுத்தால் எவ்வளவு வரும்?

2500*2*48  = 2,40,000

இதை வைத்துக் கொண்டு பக்கோடா கடை போடலாம். விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கும் வேகத்தில் அதையும் சீக்கிரமே மூட வேண்டி வரும்.

பிறகு என்ன செய்வார்கள்?

"வீதிகளிலே வேலையற்றதுகள், வேலையற்றதுகளின் நெஞ்சில் விபரீத எண்ணங்கள்"

என்ற அறிஞர் அண்ணாவின் வாசகம்தான் நினைவுக்கு வருகிறது. 

நான்காண்டுகளில் கற்றுக் கொண்ட வித்தையை இறக்கினால் என்ன ஆகும்? இவர்கள் நாளை சங்கிகளின் கூலிப்படையாக மாறுவார்கள்.

அது மட்டுமல்ல . . .

மோடி அரசு இன்னொரு கொள்கையையும் அறிவித்தால் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

பல நாடுகளில் தனியார் ராணுவம் உள்ளது. அது போன்ற அனுமதியை அதானி, அம்பானிக்கு கொடுத்தால் அவர்கள் இந்த 75 % ஒப்பந்த வீரர்களை பணிக்கு எடுத்துக் கொள்வார்கள். தனியார்  ராணுவம் என்பதும் அடிப்படையில் கூலிப்படைதான். உக்ரைன் போருக்குக் கூட சில கூலிப்படைகள் சென்று பிரச்சினையை சமாளிக்க முடியாமல் ஓடிப் போன செய்தியை படித்திருப்பீர்கள்.

அது போன்ற நிலைமை இந்திய இளைஞர்களுக்கு வர வேண்டுமா?

ஆகவே  மிஸ்டர் மோடி, ஆணிகள் அப்படியே இருக்கட்டும். ராணுவத்துக்கு ஆளெடுங்கள், தனியார் கூலிப்படைகளுக்கல்ல.

பிகு: எதுக்கு படத்துல ஆட்டுக்காரன் என்ற கேள்வி வந்ததல்லவா? மோடியின் அறிவிப்பை மிகப் பெரிய புத்திசாலித்தனம் என்று அந்த முட்டாள் வர்ணிக்கும் முன் அடித்து விடத்தான் . . . .

No comments:

Post a Comment