Wednesday, June 15, 2022

வலிமை இவ்வளவுதானா ஆட்டுத்தாடி????

 



சனாதன தர்மத்தின் வலிமை குறித்து ஆட்டுத்தாடி ஒரு உபன்யாசம் அளித்துள்ளது.

அது வலிமை அல்ல, பலவீனம் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக அளித்துள்ளார் என்று அறியாத அளவிற்கு மூடராக உள்ளார் அவர்.


“கஜினி முகமது இந்தியாவில் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மற்றும் பெஷாவர் நகரங்களை உருவாக்கினான். அந்த இரண்டு நகரங்களும் அமெரிக்காவால் அழிக்கப்பட்டு விட்டது. இதுவே சனாதன தர்மத்தின் வலிமை”

 இதுதான் ஆட்டுத்தாடி உபதேசித்தது.

 

கஜினி முகமது சோமநாதர் கோவில் உட்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தி சொத்துக்களை கைப்பற்றிக் கொண்டது கிபி ஆயிரமாவது ஆண்டில்.

 

அமெரிக்கா ஆப்கானிஸ்தானின் மீது தாக்குதல் நடத்தியது 2001 ம் ஆண்டில்தான்.

 

அதாவது கஜினி முகமது இந்தியா மீது தாக்குதல் நடத்தி ஆயிரம் ஆண்டுகள் கடந்த பிறகுதான்.

 

சனாதன தர்மம் என்றே என்னவென்று தெரியாத ஒரு நாடு நடத்திய போருக்கு ஆட்டுத்தாடி சனாதனத்திற்கு கிரெடிட் கொடுக்கிறது. ஒரு வேளை அமெரிக்கா சனாதனத்தின் ஸ்லீப்பர் செல்லோ?

 

ஏதோ கஜினி முகமது ஆப்கானிஸ்தான் திரும்பிய உடனேயே இந்திய சாமியார்கள் போய் படையெடுத்து அழித்திருந்தால் ஆட்டுத்தாடி சொல்வதில் ஏதாவது அர்த்தமிருக்கும். (சாமியார்கள் சண்டை போடுவார்களா என்று கேட்காதீர்கள். தோழர் இ.பா.சிந்தன் மொழியாக்கம் செய்த “ஆன்மீக அரசியல்” நூலில் சாமியார் மடங்கள் கூலிப்படையாக செயல்பட்ட விபரங்கள் பற்றி வருகிறது. அந்த நூல் பற்றி விரைவில் எழுதுகிறேன்)

 

இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட செப்டம்பர் 11 சம்பவம் நடந்திரா விட்டால் அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் நுழைந்திருக்காது சனாதனம் முந்தைய ஆயிரம் வருடங்கள் போலவே வலிமையில்லாமல் உறங்கிக் கொண்டுதான் இருந்திருக்கும்.

 

பிகு: இதிலே ஆட்டுத்தாடி செய்த அபத்தம் ஒன்றுண்டு. அதை பிறகு எழுதுகிறேன்.

No comments:

Post a Comment