Thursday, June 16, 2022

மோடி போலவே ஆட்டுத்தாடியும் அபத்தமாக

 


வரலாறு, புவியியல் என்று எதுவும் தெரியாமல் அபத்தமாக உளறுவது மோடியின் சிறப்பம்சம். மோடியால் நியமிக்கப்பட்ட ஆட்டுத்தாடிக்கும் எந்த எழவும் தெரியாது என்று சனாதன வலிமை பற்றிய பதிவில் அம்பலமானது.

 “கஜினி முகமது இந்தியாவில் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மற்றும் பெஷாவர் நகரங்களை உருவாக்கினான். அந்த இரண்டு நகரங்களும் அமெரிக்காவால் அழிக்கப்பட்டு விட்டது. இதுவே சனாதன தர்மத்தின் வலிமை”

 இதுதான் ஆட்டுத்தாடி சொன்னது.

 காந்தஹார் நகரமோ பெஷாவர் நகரமோ கஜினி முகமதால் உருவாக்கப் பட்டது அல்ல.

 பெஷாவர் நகர் கிபி 100 லியே உருவாக்கப்பட்டு விட்டது. அதாவது கஜினி முகமது பிறப்பதற்கு 900 வருடங்கள் முன்பாகவே, உருவான நகரம் அது.

 காந்தஹார் நகரோ கிபி 329 ஆண்டே உருவாக்கப்பட்டு விட்டது. அதை எப்படி கஜினி முகமது உருவாக்க முடியும்? மகாபாரதக் கதையில் வரும் சகுனியும் காந்தாரியும் பிறந்த காந்தார தேசம்தான் காந்தஹார் என்று சொல்வோரும் உண்டு.

 இதை விட இன்னொரு பெரிய அபத்தம் ஒன்று உண்டு.

 பெஷாவர் நகரம் இருப்பது அமெரிக்கா தாக்கிய ஆப்கானிஸ்தானில் அல்ல.

 பிறகு

 பாகிஸ்தானின் முக்கிய நகரம் பெஷாவர். அந்த நகரமெல்லாம் ஒன்றும் அழிந்து விடவில்லை.

 இது கூட தெரியாத ரவியெல்லாம் ஒரு கவர்னர்.

 இந்த முட்டாள்தான் திமுக அரசுக்கு வைக்கப்பட்ட செக் என்று வேறு சில முட்டாள்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

 

No comments:

Post a Comment