பாஜக இரண்டு நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. எம்மதமும் சம்மதமே என்பதுதான் தங்கள் கொள்கை என்று நீண்ண்ண்ண்ண்ண்ண்ட அறிக்கையெல்லாம் கொடுத்துள்ளது.
பாஜக நிர்வாகிகளின் திமிர்ப்பேச்சு மட்டுமல்ல கடந்த சில வாரங்களாக இஸ்லாமிய வழிபாட்டுத்தளங்களை ஆக்கிரமிக்க நடக்கும் சதிகளும் மேற்காசிய நாடுகளை கோபம் கொள்ள வைத்து விட்டது. கத்தார், ஈரான் நாடுகளின் அரசுகள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படையாகவே தூதரை அழைத்து பதிவு செய்து விட்டனர்.
இந்தியப் பொருட்களை புறக்கணிப்பீர் என்பது வேறு ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
அதனால் இப்போதைக்கு நல்ல பிள்ளை வேடம் போட்டு உத்தமனாக காண்பித்துக் கொள்கிறது.
மத வெறியர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்றால் முதலில் நீக்க வேண்டியது மோடியைத்தான். ஏன் ஒட்டு மொத்த கட்சியையே கலைக்க வேண்டும். நல்லவன் எவனும் மோடியையோ பாஜகவையோ ஆதரிக்க மாட்டான். பாஜகவை ஆதரிப்பவர்கள் என்றுமே அயோக்கியர்கள்தான்.
என்ன இப்போது ஒரு பாடம் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
இங்கே அடித்தால் அங்கே திருப்பி அடிப்பார்கள் என்பதுதான் அந்த பாடம்.
பெங்களூர் பொறுக்கி எம்.பி தேஜஸ்வி விஷயத்தில் நாடகம் போட்டு மீண்டும் பழைய வேலையையே செய்தது போல இப்போதும் செய்தால் இந்த முறை பாஜகவுக்கு பாதிப்பு பெரிதாகவே இருக்கும் என்பதை உணர்ந்து அடக்கி வாசிக்க வேண்டும்.
No comments:
Post a Comment