"ஆளில்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற"
என்று விவேக் கேட்பது போல
காஷ்மீர் தால் ஏரியில் படகுச்சவாரி போன போது எதிரில் யாருமே இல்லாத போதும் கை அசைத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க, அந்த வீடியோவை பாஜக பகிர்ந்து கொள்ள, பாவம் வழக்கம் போல மோடி மீண்டும் காமெடி பீஸாகி விட்டார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா, ஓமர் அப்துல்லா ஆகியோர் வறுத்தெடுத்து விட்டார்கள்.
போட்டோவுக்கு கெத்தாக போஸ் கொடுப்பது என்பதுதான் பிரதமர் பதவியின் வேலை என்று புது இலக்கணம் வகுத்துள்ளவர் மோடி. ஆமாம், அதைத் தவிர வேறென்ன உருப்படியாக செய்துள்ளார் இந்த வெட்டி மனிதர்?
அதனால் அவருக்கு இந்த நக்கல் எல்லாம் பொருட்டே அல்ல.
ஆனாலும் பாஜக போட்டோ ஷாப் (இணைய தள) வல்லுனர்கள் கொஞ்சம் பொறுமையோடு இருந்திருக்க வேண்டும். முன்பே ஒரு மேம்பாலத்தின் மீது இருந்து கொண்டு தண்டவாளத்தைப் பார்த்து கையசைத்து காமெடி பீஸான முன் அனுபவத்தை மனதில் கொண்டு
தால் ஏரி கொள்ளாத அளவிற்கு ஆட்கள் இருந்ததாக கிராபிக்ஸ் காட்சிகளை தயார் செய்து விட்டு வீடியோவை வெளியிட்டிருக்கலாம்.
என்ன இருந்தாலும் மோடி பிரதமர் அல்லவா!
வாய்ப்புள்ள தருணங்களிலாவது அசிங்கப்படாமல் பார்த்துக் கொள்வது அவர்கள் கட்சிக்காரர்களின் பொறுப்பல்லவா?
பிகு:
"ஆமாய்யா, போட்டோஷாப், கிராபிக்ஸ் செஞ்சாலும் அடுத்த பத்து நிமிஷத்தில கண்டு பிடிச்சு அதுக்கு இன்னும் அசிங்கப்படுத்துவாங்க, அதுக்கு இந்த ஆளில்லாத ஏரியில் கையசைத்த அசிங்கம் பரவாயில்லை"
என்று காவி போட்டோஷாப் ஆட்களின் மைன்ட் வாய்ஸ் கேட்கத்தான் செய்கிறது.
You are jellous about this goverment, but you cant avoid him in next 10 years. See you again afer modi wins upcoming elections 2019
ReplyDeleteஇந்த டூபாக்கூர் பேர்வழியைப் பார்த்து பொறாமைப்பட என்ன உள்ளது?
Deleteஇந்த ஆளு காமெடி செஞ்சாலும் நிஜத்தில் வில்லன்
ReplyDeleteமோடியைப் பாத்தா பொறாமையா இருக்கா?
ReplyDeleteஎன்னடா புதுசா கிளப்பறீங்க