Monday, February 11, 2019

மோடி, உங்க துட்டா. கவர்மெண்ட் துட்டா?



மோடி மதுரைக்கு வந்தார்.

அரசு நிகழ்ச்சி ஒன்று.
அதன் பின்பு காலிச்சேர் கட்சி நிகழ்ச்சி ஒன்று

பிறகு திருப்பூர் வந்தார்.
அரசு நிகழ்ச்சி ஒன்று
பிறகு கட்சி நிகழ்ச்சியில் ஒரு வெற்று முழக்கம்.

இப்படியேதான் ஊர் ஊராக
ஒரு அரசு நிகழ்ச்சி
ஒரு கட்சி நிகழ்ச்சி

என்று போய்க் கொண்டே இருக்கிறார்.

மோடியின் பயணத்துக்கான செலவுகளை யார் கொடுக்கிறார்கள்?

அரசு முறைப் பயணம் என்று கணக்கு காண்பிப்பதால் அரசின் செலவுதான்.

பிரதமருக்கு அரசு செலவழிப்பது தவறில்லை.

ஆனால் பிரதமராக அரசு செலவில் வருபவர் தன் சொந்த வேலைகள், கட்சி  வேலைகளைப் பார்ப்பது எப்படி சரியாக இருக்கும்?


கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமானால்  கட்சிப் பணத்தில் வரட்டுமே? 

இது ஊழல் கிடையாதா?

முறைகேடு கிடையாதா?



No comments:

Post a Comment