போர், போர் என்று பிப்ரவரி 14 முதல் துடித்துக் கொண்டிருப்பவர் மூத்த பத்திரிக்கையாளர் என்று பலரால் வர்ணிக்கப்படும் மாலன்.
அவர் எழுதிய ஒரு பதிவின் ஸ்க்ரீன் ஷாட் கீழே.
அபிநந்தன் சிக்கிய பின்பு அவர் எழுதிய இரண்டாவது பதிவு கிட்டத்தட்ட "சண்டையில கிழியாத சட்டை இருக்கா" என்ற வடிவேலு வசனத்திற்கு நிகரானது.
சிராய்ப்பில்லாமல் வெற்றிகள் கிடையாது என்பது உண்மைதான் மாலன் அவர்களே. அந்த சிராய்ப்பு உங்கள் உடலில் ஏற்பட்டிருக்க வேண்டும். அடுத்தவர் உடலில் அல்ல. ஒரு இந்திய விமானி சிறைப்பட்டிருக்கும் வேளையில் அவர் இப்படி பேசுவதன் அர்த்தம் என்ன?
இங்கிதத்தைப் பற்றி உபதேசிப்பவர்கள்தான் விளக்க வேண்டும்.
மாலன் மனதில் உள்ளதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக மட்டுமல்ல, அருவெறுப்பாகவும் உள்ளது.
மாலன் எழுதியதாக ஒரு போலி பதிவு வந்ததும் சட்டென்று அவர் பதட்டமாகி விட்டார். நான் அபிநந்தன் பற்றி எந்த பதிவுமே எழுதவில்லை என்று ஒரு வாக்குமூலமும் அளித்து விட்டார், அந்த சிராய்ப்பு பதிவு யாரைச் சொல்கிறது என்ற உண்மையை மறைத்து விட்டு.
சமூக வலைத்தளங்களில் மோடிக்கும் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே போர் வெறியை தூண்டுவதற்கும் எதிரான கருத்துக்கள் உடையவர்கள் அனைவருமே அபிநந்தன் சிக்கிக் கொண்டதை எண்ணி வருந்துகிறார்கள், கவலைப் படுகிறார்கள், அவர் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறார்கள்.
ஆனால் இவரோ நான் அபிநந்தன் பற்றி எதுவுமே எழுதவில்லை என்று வாக்குமூலம் அளிக்கிறார்.
மாலனுக்கோ அவரைப் போன்ற மாரிதாஸ் ஆகிய ஆட்களுக்கோ இந்திய மக்களைப் பற்றியோ கொஞ்சமும் கவலை கிடையாது. மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக கூலி வாங்கிக் கொண்டு கூவுபவர்கள்.
இவர்களே இவர்களை அம்பலப்படுத்திக் கொண்டு விட்டனர்.
இவர்கள் எல்லாம் போர் முனைக்குச் சென்றால் எப்படி தவிப்பார்கள் என்பதை மேலே உள்ள படம் விளக்கும்.
No comments:
Post a Comment