வட
மாநிலங்களில் பாஜக பரப்பிக் கொண்டிருக்கும் இரண்டு படங்கள் பற்றி முக நூலில் சில தோழர்கள்
பகிர்ந்து கொண்டிருந்தார்கள். ஹிந்தி தெரிந்த தோழர் ஒருவரிடம் கேட்டு உறுதிப்படுத்திக்
கொண்ட பிறகே இதை எழுதுகிறேன்.
புதிய
தலைமைச் செயலகமாக கலைஞரால் கட்டப்பட்டு ஜெயலலிதாவால் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்ட
இந்த கட்டிடம்
மதுரையில்
மோடி கட்டிய “ஏ.ஐ.ஐ.எம்.எஸ்” மருத்துவமனையாம். மருத்துவமனை கட்டிடத்திற்கான வரைபடம்
கூட இன்னும் தயாராகவில்லை. நிதி ஒதுக்கப்படவில்லை. வழக்கமான ஜூம்லா வேலையாக அடிக்கல்
நாட்டு விழா மட்டும் நடந்துள்ளது.
அதற்குள்ளாக
மருத்துவமனையை கட்டி திறந்து விட்டதாகவே படம் போட்டு விட்டார்கள் பாஜக காரர்கள்.
மேலே
உள்ளது மதுரையில் வைகை நதியில் மோடி கட்டிய பாலமாம். மோடி மதுரையில் பாலம் மட்டும்
கட்டவில்லை. ஹாலந்து என்ற நதியையே மதுரைக்கு கொண்டு வந்து விட்டார். ஆமாம் இந்த பாலம் ஹாலந்து நதிக்கு மத்தியில் இருக்கிறது.
ஆனால் இந்த நதி
மதுரையில்
இல்லை.
ஹாலந்து
நாட்டில் இருக்கிறது.
இந்த
இரு படங்களிலும் சொல்லப்பட்ட வாசகம் என்ன தெரியுமா?
மோடி – இந்தியாவின் சக்தி
-
இந்தியாவின்
நம்பிக்கை
உண்மையில்
எழுதப்பட வேண்டிய வாசகம்
போட்டோஷாப்
- மோடியின் சக்தி
மோடியின் நம்பிக்கை
ஆமாம்.
இதையெல்லாம் நம்பக்கூடியவர்களா ஹிந்தி பேசும் மாநிலத்தவர்?
That's why politicians keep them as fools.periyar is not there to induce the sixth sense.
ReplyDelete