டென்ஷன்
ஆகாம பதில் சொல்லுங்க மோடி
இந்திய
விமானப்படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது என்று சொல்லப்படுவதை ஏற்றுக்
கொள்கிறேன். துணிச்சல் காண்பித்த வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.
கச்சிதமான
தாக்குதல் நடத்திய விமானங்களை தயாரித்தது ஹெச்.ஏ.எல் என்ற பொதுத்துறை நிறுவனம் என்பதில்
பெருமிதம் கொள்கிறேன்.
அம்பானி
அளவிற்கு அதற்கு திறமையோ அனுபவமோ கிடையாது என்று அரசு அதனை நிராகரித்தது நினைவுக்கு வரக்கூடாது என்று கட்டுப்
படுத்திக் கொண்டாலும் வந்து தொலைக்கிறது.
சரி
அது கிடக்கட்டும் விடுங்கள்.
உயிரிழப்பு
எதுவும் கிடையாது என்று பாகிஸ்தான் அரசு சொல்வதை ஏற்காமல் முந்நூறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக
இந்திய அரசு சொல்வதையே ஒப்புக் கொள்கிறேன்.
ஒரு
வீடியோ கேமை இந்திய விமானப்படையில் தாக்குதல் பாரீர் என்று பாஜக ஆதரவாளர்கள் பரப்பியதைக்
கூட இது காவிகளின் வழக்கமான மோசடி வேலை என்று கழுவி ஊற்றுவதற்குப் பதிலாக அது சிலரின்
ஆர்வக் கோளாறு என்றே புரிந்து கொள்கிறேன்.
அரசு
தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்டவனாக
கேட்கிறேன்.
வெடிகுண்டு
தாக்குதலுக்கான வாய்ப்பு உள்ளதாக ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறை உளவுத்துறையின் அறிக்கை
அளித்தும் அதனை அலட்சியம் செய்து நாற்பது வீரர்களின் வீர மரணம் நிகழ அனுமதித்தது யார்?
ஏன்? முதலில் ஏன் கோட்டை விட்டீர்கள்?
டென்ஷன்
ஆகாம பதில் சொல்லுங்க பார்ப்போம்.
பின் குறிப்பு :
அபி நந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொள்வதற்கு முன்பே காலையில் எழுதிய பதிவு இது. இன்று அபி நந்தன் சிக்கிக் கொண்டது உட்பட அனைத்தும் உளவுத்துறை தகவலை அலட்சியப்படுத்தியதில்தான் துவங்கியது என்பதால் இப்பதிவு இப்போது முன்னை விடவும் இன்னும் பொருத்தம் என்றே கருதுகிறேன்.
No comments:
Post a Comment