நேற்று முன் தினம் இரவு.
கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி விட்டு ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் சமயத்தில் வானைப் பார்த்தால்
தூரத்து நிலவும் அருகில் இருந்த தென்னையும் அழகாகத் தெரிந்ததால்
அதை அலைபேசியில் கைப்பற்றி வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து (கண்ணில் தெரிந்த அழகு காமெராவில் வரவில்லை என்பது வேறு விஷயம்)
போனை எடுத்தால்
அந்த கடைக்காரர் கல்லாவை அப்படியே விட்டு விட்டு ஓடி வந்து விட்டார்.
"என்ன சார், நிலாவுல பாபா படம் தெரியுதுன்னு சொல்றாங்களே சார், அதுக்குத்தானே போட்டோ எடுக்கறீங்க"
என்று அவர் கேட்க
பக்கத்து கடைக்காரரும்
"ஆமாம் சார், வாட்ஸப்பில் கூட வந்தது"
என்று ஆமோதிக்க
"ஆளை விடுங்கப்பா, மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில நான் இனிமே நிலாவை போட்டோவே எடுக்க மாட்டேன்"
என்று ஓடி வந்து விட்டேன.
வாட்ஸப்பில் வருவதெல்லாம் நிஜம்தான் என்று நம்பும் ஆட்கள், மோடி நல்லவர், வல்லவர் என்பதைக் கூட நம்பத்தானே செய்வார்கள்!
பாவம் அப்பாவிகள் !!!!!
மோடி கெட்டவர் என்பதையும் கூட.
ReplyDelete