ஜம்மு காஷ்மீரில்
நேற்று எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் மீது நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
பாகிஸ்தானிலிருந்து
செயல்படும் ஜெய்ஷ் அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
காஷ்மீர்
பகுதியில் அமைதி திரும்புவதற்கான சாத்தியக்கூறுகளை தடுத்து நிறுத்தவும் இந்தியா பாகிஸ்தான்
இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் கூட நடக்கக் கூடாது என்பதே இத்தாக்குதலின் நோக்கமாக
இருப்பதால் இது அயோக்கியத்தனமானது.
நேருக்கு
நேர் சண்டையிட வக்கில்லாமல் இது போன்ற தாக்குதல் முறைகள் கோழைத்தனமானது.
இந்தியாவில்
நாடாளுமன்றத் தொடர் முடிந்து புதிய தேர்தலுக்கான அறிவிப்பு வரும் வேளையில் இப்படிப்பட்ட
தாக்குதல் நடத்துவது யாருக்கு ஆதாயமாக அமையும் என்பது கூட தெரியாத கூமுட்டைகளாக அந்த
அமைப்பு உள்ளது.
இந்த அமைப்புக்களால்
காஷ்மீர் மக்களுக்கு எந்த பலனோ, பாதுகாப்போ கிடையாது என்பதுதான் யதார்த்தம்.
No comments:
Post a Comment