Saturday, February 9, 2019

வேட்டைக்குப் பின்னே ஆறிப்போன போண்டா





இந்த வருட வேட்டை விபரம்

இந்த வருட சென்னை புத்தக விழாவிற்கு 14.01.2019 அன்று சென்றேன். போகிக்கு அரசு அலுவலகங்கள், பள்ளிகள் எல்லாம் விடுமுறை என்றாலும் எங்களுக்கு விடுமுறை கிடையாது. அதனால் விடுப்பெடுத்து சென்றேன். அன்று சென்னையில் வேறு வேலையும் இருந்தது என்பது வேறு விஷயம்.

வழக்கம் போல மதிய வேளையில் சென்றதால் நிதானமாக பல அரங்குகளுக்குச் செல்ல முடிந்தது.  மாதாமாதம் புத்தகங்களுக்காக ஒதுக்கி வைக்கும் தொகைக்கு வேறு செலவு வந்து விட்டதால் கொஞ்சம் கட்டுப்பாடாக இருந்தேன். ஆனாலும் சபலம் விடாததால் பட்ஜெட்டை விட அதிகமாகி விட்டது.

ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு உதயச்சந்திரனைத் தவிர வேறு பிரபலங்கள் யாரும் கண்ணில் படவில்லை. 

ஞானியின் அரங்கில் அவர் இல்லாததை உணர்த்தும் விதமாக இந்த வருடம் கருத்துக் கணிப்பு பானைகள் எதுவும் இல்லை.

டெல்லி அப்பளம்தான் பரபரப்பாக விற்றது என பல பதிப்பாளர்கள் முணுமுணுத்த பதிவுகளை படித்தேன்.

அங்கே செல்லா விட்டாலும் புத்தக வேட்டை முடிந்ததும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அமைத்திருந்த உணவகத்திற்குச் சென்று போண்டா - காபி சாப்பிட்டேன். 

போண்டா ஆறிப் போயிருந்தது.
காபி சூடாக இருந்தது.

வாங்கிய நூல்களில் சுவையான, சூடான காபி எத்தனை, ஆறிப் போன போண்டா எத்தனை என்பது படித்த பின்புதான் தெரியும்.

இதோ வாங்கிய நூல்களின் பட்டியல்.
கடைசியில் உள்ளது மட்டும் பரிசாக வந்த நூல்

எண் பெயர் ஆசிரியர் தன்மை பக்கம்
1 நானும் வீரப்பனும் நக்கீரன் கோபால் அனுபவம் 96
2 நீதி தேவன் மயக்கம் அறிஞர் அண்ணா நாடகம் - மறு வாசிப்பு 81
3 மனைவி கிடைத்தாள் சுஜாதா நாவல் - புனைவு 80
4 ஜோதி சுஜாதா நாவல் - புனைவு 56
5 ரோஜா சுஜாதா நாவல் - புனைவு 72
6 கேரக்டர் சாவி நகைச்சுவை கட்டுரைகள் 118
7 குருதி ஆட்டம் வேல ராமமூர்த்தி நாவல் - புனைவு 88
8 சிறைப்பறவை சி.ஏ.பாலன் சிறைப் போராட்டம் 66
9 சேதுக்கால்வாய் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும் குமரன் தாஸ் கட்டுரைகள் 96
10 அரிய நாச்சி வேல ராமமூர்த்தி நாவல் - புனைவு 120
11 ஜிப்ஸி ராஜூ முருகன் கட்டுரைகள் 136
12 எதிர்ச்சொல் பாரதி தம்பி கட்டுரைகள் 120
13 நகரத்துக்கு வெளியே விஜய மகேந்திரன் சிறுகதைகள் 132
14 தேர்தலின் அரசியல் அ.வெண்ணிலா கட்டுரைகள் 104
15 கதைகளின் கதை சு.வெங்கடேசன் கட்டுரைகள் 128
16 குறுக்கு வெட்டு சிவகாமி நாவல் - புனைவு 170
17 கரும்பலகை எஸ். அர்ஷியா நாவல் - புனைவு 170
18 பாடலென்றும் புதியது கலாப்ரியா கட்டுரைகள் 119
19 பழைய பேப்பர் ஞானி கட்டுரைகள் 144
20 போருழல் காதை குணா கவியழகன் நாவல் - புனைவு 350
21 மதுரம் வண்ணதாசன் சிறுகதைகள் 136
22 காட்டில் உரிமை மகாசுவேதா தேவி தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி வாழ்க்கை வரலாறு 368
23 வானம் வசப்படும் பிரபஞ்சன் நாவல் - புனைவு 496
24 கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி அஜயன் பாலா சிறுகதைகள் 160
25 பாரதியும் ஷெல்லியும் தொ.மு.சி.ரகுநாதன் கட்டுரைகள் 24
26 மாற்றுக் கல்வி  பாவ்லோ ஃபெய்ரே சொல்வதென்ன? அ.மார்க்ஸ் கட்டுரைகள் 46
27 ரோஹிங்கிய இன அழிப்பு அ.மார்க்ஸ் கட்டுரைகள் 72
28 திராவிடம், மார்க்சியம் தமிழ்த் தேசியம் இராசேந்திர சோழன் கட்டுரைகள் 112
29 இந்துத்துவமும் சியோனிசமும் அ.மார்க்ஸ் கட்டுரைகள் 56
30 சம்ஸ்காரா யு.ஆர். அனந்தமூர்த்தி தமிழில் டி.எஸ்.சதாசிவம் நாவல் - புனைவு 156
31 நீங்கள் சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருக்கிறீர்கள் ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் 112
32 வேள்பாரி - 2 பாகங்கள் சு.வெங்கடேசன் நாவல் - புனைவு 1408
33 தேசத்துரோகி ஷோபா சக்தி சிறுகதைகள் 224
34 நீல நதி லஷ்மி சரவணகுமார் சிறுகதைகள் 118
35 மணல் பூத்த காடு முஹம்மது யூசுஃப் நாவல் - புனைவு 448
36 சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை அ.கரீம் சிறுகதைகள் 104
37 கெத்து சாத்தூர் இலட்சுமணப் பெருமாள் சிறுகதைகள் 96
38 பாலஸ்தீன்  எட்வர்ட் செய்த் தமிழில் எஸ். அர்ஷியா வரலாறு 64
39 சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்தது ஏன் எம். எம். சசீந்திரன் தமிழில் யூமா வாசுகி கட்டுரைகள் 64
40 கறுப்பர் நகரம் கரன் கார்க்கி நாவல் - புனைவு 350
41 காளி ச.விஜயலட்சுமி சிறுகதைகள் 144
42 1729 ஆயிஷா நடராஜன் நாவல் - புனைவு 80
43 குஜராத் - திரைக்குப் பின்னால் ஆர்.பி.ஸ்ரீகுமார் தமிழில் ச.வீரமணி, தஞ்சை ரமேஷ் குஜராத் கலவரம் 240
44 ஜிப்ஸியின் துயர நடனம் யமுனா ராஜேந்திரன் கட்டுரைகள் 190
45 பேட்டை தமிழ்ப்பிரபா நாவல் - புனைவு 350
46 ஒரு புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி நாவல் - புனைவு 220
47 பால்கட்டு சோலை சுந்தரப் பெருமாள் நாவல் - புனைவு 336
48 எசப்பாட்டு ச.தமிழ்ச்செல்வன் கட்டுரைகள் 216
49 தேரிக்காடு அமல்ராஜ் அனுபவம் 270
50 பாளையங்கோட்டை நினைவலைகள் ப. எசக்கிராஜன் அனுபவம் 172
        9278

2 comments:

  1. இதுவே குறைச்சலா வாங்கினதா?
    விலை எவ்வளவுன்னு போடலையே?

    ReplyDelete
  2. Big list.Great reading pleasure!

    ReplyDelete