Friday, February 22, 2019

25,000 கோடி ரூபாய்க்கு Deep Hair Cut





வங்கி வாராக்கடனும் Deep Hair Cut  ம்

முடியை ஒட்ட வெட்டுவதற்கும் வங்கி வாராக்கடனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.

ஆமாம் இருக்கிறது.

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் சி.பி.கிருஷ்ணன் அவர்களின் உரை என்ன சம்பந்தம் என்பதை விளக்குகிறது. முந்தைய பதிவான வங்கிகளின் நஷ்டம் நிஜம்தானா வின் இணைப்பு இங்கே உள்ளது. அதை படிக்காதவர்கள் அதை முதலில் படிப்பது நல்லது. 


வாராக்கடனை வசூல் செய்யுங்கள் என்று மத்தியரசு சொல்வதில்லை. ஆனால் தள்ளுபடி செய்யுங்கள் என்றே நிர்ப்பந்திக்கிறது.

அப்படி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் அளிக்கிற அருண் ஜெய்ட்லி பயன்படுத்தும் வார்த்தைகள் என்னவெல்லாம் தெரியுமா?

Be Bold

Have Deep Hair Cut

(பெரு முதலாளிகளுக்காக வங்கிகளை மொட்டையடிக்க விரும்புகிறார் என்பதை எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார்! )

அது மட்டுமல்ல.

எதற்கும் பயப்பட வேண்டாம். ஊழல் தடுப்புச் சட்டத்தையே நான் மாற்றி விடுகிறேன் என்றும் உறுதி அளிக்கிறார்.

(வாராக் கடனை அதிகபட்சமாக எவ்வளவு தள்ளுபடி செய்ய முடியுமோ, அந்த அளவு தள்ளுபடி செய், முடிஞ்சா நீயும் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சம்பாதிச்சுக்கோ, நாங்க கண்டுக்க மாட்டோம். சட்டத்தையே தூக்கி போட்டுடலாம்)

ஒரே வங்கியாக கடன் கொடுப்பதற்கு பதிலாக பல வங்கிகள் இணைந்து கூட்டாக கடன் கொடுப்பது (Consortium) என்ற நடைமுறை உள்ளது. எதற்கு நான்கைந்து வங்கிகளாக சேர்ந்து கடன் கொடுப்பது? வங்கிகளையே இணைத்து விட்டால் கடன் கொடுப்பது எளிது என்றுதான் வங்கிகளை இணைக்கும் முடிவை எடுக்கிறார்கள்.

அப்படி Consortium இருந்தாலும் கூட கடனை தள்ளுபடி செய்ய எதை வேண்டுமானாலும் செய்ய அரசு தயாராக இருக்கிறது.

அலோக் இண்டஸ்ட்ரிஸ்  என்ற நிறுவனத்தின் வாராக்கடன் தொகை 30,000 கோடி ரூபாய்.  அந்த கடனில் வெறும் 5000 கோடி ரூபாயை மட்டும் திருப்பிக் கட்டி விட்டு அந்த நிறுவனத்தை எடுத்துக் கொள்வதாக ரிலையன்ஸ் நிறுவனம் சொல்கிறது.

5000 கோடி ரூபாய் என்பது அடிமாட்டு விலை என்று கன்சார்ஷியம் கருதுகிறது. வாக்கெடுப்பு நடக்கிறது. கடன் தொகைக்கு ஏற்ப வாக்கு சதவிகிதம் கணக்கிடப்படும்.  75 % வாக்குகள் இருந்தால்தான் முடிவெடுக்க முடியும். ரிலையன்ஸிற்கு ஆதரவாக 72 % வாக்குகள் மட்டுமே  கிடைக்கிறது. ரிலையன்ஸின் முன்மொழிவு நிராகரிக்கப் படுகிறது.

ஆனால் அதன் பின்பு நடந்தது என்ன?

அம்பானியிடமிருந்து மோடிக்கு தொலை பேசி செல்கிறது. அவர் உடனடியாக செயல்பட்டார்.

66 % வாக்குகள் இருந்தாலே போதுமானது என்று ஒரு அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு  அலோக் இன்டஸ்ட்ரிஸ்  நிறுவனம் அம்பானிக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது.

அருண் ஜெய்ட்லி அறிவுரைப்படி Deep Hair Cut மூலமாக இந்த ஒரு கம்பெனி விஷயத்தில் மட்டும் வங்கிகள் இழந்த தொகை 25,000 கோடி ரூபாய்.

அரசின் அராஜகம் குறித்த செய்திகள் இத்தோடு முடியவில்லை.

இன்னும் இருக்கிறது. அவை அடுத்த பதிவில்.

பிகு

நீல நிறத்தில் இருப்பது என் கமெண்ட்




No comments:

Post a Comment