Tuesday, February 5, 2019

மாலனின் மனசாட்சிக்கு ஒரு கேள்வி




சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் மம்தா பேனர்ஜி செய்யும் அராஜகம் குறித்து விரிவாக ஒரு முகநூல் பதிவிட்டுள்ளார்.

மம்தா செய்வது அட்டூழியம் என்பதிலும் அவரது ஊழலை மறைக்க ஜனநாயக வேடம் பூண்டுள்ளார் என்பதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

மூத்த பத்திரிக்கையாளர் மாலன் என்றே அவரது செய்தி உலா வருகிறது.  ஒரு மூத்த பத்திரிக்கையாளராக மாலன் ஊழலுக்கு எதிராக இப்பிரச்சினையில் பொங்கி உள்ளாரா என்ற கேள்வி வருகிறது.

சாரதா ஊழலில் தொடர்புடைய பலரைப் பற்றி எழுதியுள்ள மாலனின் பேனா ஏன் அந்த ஊழலின் பெரும்புள்ளியும் மம்தாவின் முன்னாள் தளபதி முகுல் ராயைப் பற்றி ஏன் எதுவுமே எழுதவில்லை?

முகுல் ராய் பாஜகவில் இணைந்த பின்பு அவரை சி.பி.ஐ விசாரிக்கவே இல்லை. பாஜக வில் இணைந்ததன் மூலம் முகுல் ராய் எப்படி உத்தமராக சி.பி.ஐ யின் கண்ணுக்குத் தெரிந்தாரோ, அது போல மாலனின் கண்ணுக்கும் தெரிந்து விட்டார் போல!

சபரிமலை கோயில் நடையைச் சாற்றி தூய்மைப்படுத்தும் பூஜை செய்தது போல பாஜகவில் இணையும் ஊழல் பேர்வழிகள் மீதும் கங்கைத் தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தி புனிதமாக்கி விடுவார்களோ?

மாலனின் பதிவில் குணால் கோஷ் பற்றி சொல்லப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவரை மோடி அரசு கொல்கத்தா நகரின் டெலிபோன் அட்வைஸரி கமிட்டி உறுப்பினராக நியமித்தது மாலனுக்கு தெரியாது போல. தெரிந்திருந்தால் எப்படி முகுல் ராயின் பெயரை சொல்லாமல் கமுக்கமாக மறைத்தது போல குணால் கோஷ் பெயரையும் தன் பதிவிலிருந்து இருட்டடிப்பு செய்திருப்பார் இந்த மூமூமூமூத்த பத்திரிக்கையாளர். 

குணால் கோஷை நியமித்த 10.12.2016 தேதியிட்ட கடிதத்தின் நகல் கீழே உள்ளது.



சாரதா சிட்பண்ட் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை மோடி பதவியேற்கும் முன்பாகவே உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது என்று சொல்கிறார். அது சரிதான். இத்தனை வருடங்களாக சி.பி.ஐ என்ன பூ பறித்துக் கொண்டிருந்ததா என்பதையும் அவர் சொல்லி இருக்கலாமே?

சரி பாஜக என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். மூத்த பத்திரிக்கையாளர் என்று சொல்லிக் கொள்ளும் மாலனும் அதையே செய்யலாமா?

சரி, இப்போது ஊழல் பற்றி இவ்வளவு பேசும் மாலன், மத்தியப் பிரதேசத்தில் பலரின் மர்ம மரணத்திற்கு காரணமான வியாபம் ஊழல் பற்றி எப்போதாவது பொங்கியுள்ளாரா? சொல்லப்போனால் வக்காலத்து வாங்கியுள்ளார் என்பதுதான் உண்மை.

ரபேல் விமான ஊழலிலும் பாஜகவிற்கு ஆதரவாக பேசியவர்தான் மாலன் என்பதை மறக்க முடியுமா?

மம்தாவின் அராஜகத்திற்கு எதிராக பொங்குவது நியாயம்தான். ஆனால் மகாராஷ்டிர அரசு மனித உரிமை, தலித் செயற்பாட்டாளர்கள் மீது ஏவி விடும் அடக்குமுறைக்கு எதிராகவும் பொங்க வேண்டாமா சாரே?

மாட்டுக்கறி அரசியல் நடத்தும் காவிகள் பற்றி கருத்து சொல்லாமல் கள்ள மௌனம் ஏனோ சார்?

நீங்கள் உங்களை பாஜககாரர் என்று வெளிப்படையாக சொல்லிக் கொண்டால்  இந்த  கேள்விகளுக்கு அவசியமே இல்லை.

இப்போது நடப்பது மோடியும் மம்தாவும் இணைந்து நடத்துகிற நாடகம் என்பதும் அந்த நாடகத்தின் நோக்கம் கொல்கத்தாவில் திரண்ட செங்கடல் செய்தியை பின்னுக்குத் தள்ளத்தான் என்பது இந்திய அரசியலை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். 

ஆனால் மூத்த பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் உண்மையின் ஒரு பக்கத்தை எழுதி மறு பக்கத்தை மறைப்பது என்பது மனசாட்சி உள்ள பத்திரிக்கையாளருக்கு அழகா என்பதுதான் கேள்வி.

மன சாட்சியை அடகு வைத்து விட்டு பாஜக விற்கு ஆதரவாக எழுதிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இதெல்லாம் தெரியாதது அல்ல.

இந்த பதிவே உங்களுக்கு அல்ல. உங்களை ஒரு நல்ல பத்திரிக்கையாளர் என்று பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கு உங்கள் உண்மை முகத்தை காண்பிக்கத்தான்.


3 comments:

  1. அவர் ஸ்லீப்பர் செல் கிடையாது. ஆக்டிவ் செல்

    ReplyDelete
  2. Cotton white saree, hawai slipper does not make Mamata a Mahathma. She is as corrupt as all other people like Jayalalitha sasikala, Sonia, Lalu, Karunanithi Sharad Pawar and the likes. As
    resident of West Bengal for longtime I know lot of people had lost their hard earned money in this scam.Not only that national security as also been threatened by large transfer of these funds to terrorist networks via Bangladesh.

    ReplyDelete