மகிழ்ச்சி, வருக அபிநந்தன் . . .
அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். பதட்டம் நிறைந்த பத்து நாட்களில் கிடைத்த நல்ல செய்தி.
மகிழ்ச்சியாக இருக்கிறது.
பாதுகாப்பாக நாளை அபிநந்தன் வீடு திரும்பட்டும்.
இன்றைய சூழல் நம்பிக்கை தருகிறது. போர் விரும்பிகளும் ஊடகங்களும் கொஞ்சம் அமைதி காப்பது நல்லது.
போர், போர் என்று கதறிக் கொண்டிருந்தவரும் சண்டை என்றால் சிராய்ப்பு இருக்கத்தான் செய்யும் என்று சொன்னவருமான மூமூமூமூமூமூத்த பத்திரிக்கையாளர் மாலன், இந்த நிமிடம் வரை அபிநந்தன் வீடு திரும்புவது பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.
சிராய்ப்பில்லாமல் அபிநந்தன் திரும்புவதில் ஏமாற்றமா மாலன்?
பின் குறிப்பு ; இன்றைய சூழலுக்கு பொருத்தமான இந்த ஓவியத்தை வரைந்தது தோழர் ரவி பாலேட்
தெற்காசியாவில் சாதுரியமும் தூரநோக்குப் பார்வையும் கொண்ட தலைவராக இம்ரான்கான் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteகிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி உலகையே தன் பக்கம் திருப்பிய இம்ரான் கானின் அறிவு எங்கே? தன் நாட்டு பெண்கள் தாலி அறுந்தாலும் பரவாயில்லை, தானும் தன் பங்காளிகளும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்காக போர் போர் என்று படம் காட்டிய கயவன் மோடி எங்கே?