Friday, February 15, 2019

கார்கிலைப் போலவே கோட்டை விட்ட . . .




350 கிலோ எடை கொண்ட வெடிப்பொருட்களை  ஒரு வாகனத்தில் ஏற்றி  நெடுஞ்சாலைக்கு கொண்டு வந்து ஒரு தாக்குதல் நடத்தப்  போகிறார்கள் என்ற தகவல் அரசுக்குத் தெரியாதா? ஒரு வாரம் மூடப்பட்ட பாதையில் ஆயிரக்கணக்கான வீரர்கள் இடம் பெயர  உள்ளனர் என்கிற போது  கவனம் வேண்டாமா?

இது உளவுத்துறையின் முழுமையான தோல்வி 

இதை நான் சொல்லவில்லை.

காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் சொல்கிறார்.

தாக்குதல் நிகழ்த்திய தீவிரவாதி சந்தேகத்திற்குரியவர்கள் பட்டியலில் இருந்தான். ஆனால் அவன் ன் எங்கே உள்ளான், என்ன செய்கிறான் என்பது தெரியாமல் போய் விட்டது என்கிறார் அவர்.

இந்த உளவுத்துறை தோல்விக்கு யார் பொறுப்பு?

அனைத்தையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள ராணுவத் தலைமையைத் தவிர வேறு யாரைச் சொல்ல முடியும்/ 

கார்கிலில் நடந்ததும் இதுதான்.

ஊடுறுவல்  நிகழ்ந்தததை கோட்டை விட்டு விட்டு பிறகு போர் வரை சென்றார்கள். அதிலும் சவப்பெட்டி ஊழல்  செய்து காசு பார்த்தார்கள்.

இப்போது வாக்கு ஆதாயம் பார்ப்பார்களா?

ஒரே ஒரு சந்தேகமும் வராமல் இல்லை.

உளவுத்துறை தூங்கியதா?

அல்லது 

அது எச்சரிக்கை அளித்தும் அலட்சிய படுத்தப்பட்டதா?

ஏனென்றால் பாஜக ஆட்சிக்காக  எதையும் செய்யும்  

4 comments:

  1. சீனா போர் தொடுக்க போகின்றது என்று உளவுத்துறை அறிக்கை நேருவுக்கு போயிருந்தும் நேரு அந்தப்புரத்தில் பிசியாக இருந்தபடியால் நிகழ்த்த விளைவு நாம் அனைவரும் அறிந்ததே

    R.RAJENDRA

    ReplyDelete
    Replies
    1. Though it is a typical irrelevant Sanghi type reply, it is also a confession of Modi government's failure

      Delete
  2. மறுத்து கருத்து சொன்னால் 'சங்கிகள்' என்ற அடைமொழி! கமெண்ட் என்பதை பதிவு சார்ந்த கமெண்ட் மட்டும் என்று மாற்றிவிடுங்களேன்!

    ReplyDelete
  3. சார் நீங்க என்ன சொல்ல வரீங்க என்று புரியவில்லை.
    மறுத்து கருத்து சொல்லும் யாரையும் நான் சங்கி என்றழைப்பதில்லை.
    ஆனால் எழுதும் பதிவிற்கு தொடர்பில்லாமல் திசை திருப்புவது சங்கிகளின் வேலை. அதைத்தான் அந்த அனானியின் பின்னூட்டத்திற்கு பதில் அளிக்கையில் குறிப்பிட்டுள்ளேன்

    ReplyDelete