மத்திய பட்ஜெட்டில் வழக்கம் போல தமிழகம் ரயில்வே திட்டங்களில் வஞ்சிக்கப்பட்டுள்ளதை எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் அம்பலப் படுத்துகிறார்.
தீக்கதிரில் வெளியான அவரது கட்டுரையின் ஒரு பகுதி. மீதமுள்ள பகுதிகளும் இன்று முழுதும் வெளியாகும்.
மோடி பக்தர்கள் முட்டு கொடுக்க வாய்ப்பில்லாத வகையில் உண்மை இருக்கிறது.
பரஞ்சோதிக்காக காத்திருக்கும் பாஞ்சாலி
கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் இப்படித்தான் உணர்ச்சிகரமாய் முடியும். தமிழக ரயில்வே திட்டங்களும் பட்ஜெட் நிதிக்காக இப்படி காத்திருக்கின்றன. தமிழ்நாடு இரட்டை வழி இருப்புப் பாதை திட்டங்களின் மொத்த மதிப்பீட்டிற்கும் பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கும் பெரும் விரிசல் உள்ளது.
102 கி.மீ வாஞ்சி மணியாச்சி-திருநெல்வேலி-நாகர்கோவில் இருப்பு பாதைக்கு ஒதுக்கீடு ரூ. 183 கோடி. திட்ட மதிப்பீடு ரூ.1003 கோடி.
86 கி.மீ கன்னியாகுமரி- நாகர்கோவில்- திருவனந்தபுரம் இருப்பு பாதைக்கு ரூ. 133 கோடி. திட்ட மதிப்பீடு ரூ.1432 கோடி.
160கி.மீ மதுரை- வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி இருப்புப் பாதை திட்டத்திற்கு பட்ஜெட் செய்துள்ள ஒதுக்கீடு ரூ. 169 கோடி. அதன் மொத்த மதிப்பீடு ரூ.1182 கோடி. போனஆண்டு ஒதுக்கீடு ரூ. 75 கோடி. உயர்வு என கொண்டாட முடியுமா?
2020 ஆம் ஆண்டிற்குள்ளாக நிறைவேற வேண்டியரூ. 3615 கோடி ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூ.735 கோடிகளாக மட்டுமே உள்ளது.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விழுப்புரம்-தஞ்சாவூர் இரு வழிப்பாதைக்கான ஒதுக்கீடு இல்லாதது ஏமாற்றமே.
இதுவெல்லாம் தென், மேற்கு மாவட்டங்களின் சமூக, பொருளாதார வளர்ச்சியோடு தொடர்புடையதாகும்.
நன்றி. பொருத்தமான திருத்தம்.
ReplyDelete