பன்னாட்டு
நிறுவனமான எரிக்ஸனுக்கும் அனில் அம்பானிக்கும் இடையேயான பிரச்சினையில் அனில் அம்பானியின்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் எரிக்ஸன் நிறுவனத்திற்கு 453 கோடி ரூபாயை நான்கு மாதத்திற்குள் செலுத்த வேண்டும்.
அப்படி செலுத்த தவறினால் மூன்று மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே
தாங்கள் கொடுத்த ஆணையை மதிக்க தவறியதால் அனில் அம்பானியின்
ரிலையன்ஸ்
கம்யூனிகேஷன்ஸ்
ரிலையன்ஸ்
டெலிகம்யூனிகேஷன்ஸ்
ரிலையன்ஸ்
இன்ஃப்ராடெல்
ஆகிய
மூன்று நிறுவனங்களும் தலா ஒரு கோடி ரூபாயை உச்ச நீதிமன்றத்திற்கு நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்கான அபராதமாக
செலுத்த வேண்டும். அப்படி செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க
வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இறுதியில்
என்ன நடக்கப் போகிறது?
அம்பானி
எரிக்ஸனுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் பணத்தை தரப் போகிறாரா?
அல்லது
நான்கு
மாதம் ஜெயிலுக்குப் போவாரா?
அல்லது
ரபேல்
ஊழல் நாயகன் அனில் அம்பானிக்காக அவரது உற்ற நண்பனும் சேவகருமான ஏழைத்தாயின் ஊதாரி மகன்
தலையிட்டு
நீதி
தேவதையின் முகத்தில் கரி பூசுவதற்கான நடவடிக்கை எதையாவது எடுப்பாரா?
இறுதியில்
சொல்லப்படுவது நிகழ்வதற்கான வாய்ப்பு அதிகம்.
இந்த
அஞ்சு வருஷத்தில எத்தனையோ செஞ்சிட்டாங்க!
இதை
செய்ய மாட்டாங்களா???
பிகு:
ஏதோ நம்ம மன திருப்திக்கு அனில் அம்பானி கம்பி எண்ணுவது போல படமாவது போடுவோம்!
Fate of the people and nation.
ReplyDelete😀😀😀
ReplyDelete