தேவையில்லாமல்
வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் மோடி.
ஆந்திரா
குண்டூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின்
பெயரை நேரடியாகச் சொல்வதற்குப் பதிலாக “லோகேஷின் அப்பா” என்றே அழைத்து வெறுப்பேற்றியுள்ளார்.
அதற்கு
பதிலடி கொடுத்த சந்திரபாபு நாயுடுவோ
“ஆம்,
நான் லோகேஷின் அப்பாதான். புவனேஸ்வரியின் கணவன், தேவனேஷின் தாத்தா. இதுதான் என்னுடைய
குடும்பம். நான் என் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
மோடியின் மனைவி பெயர் தெரியுமா உங்களுக்கு. அவர்கள்
பெயர் ஜசோதா பென். அவர்களை இவர் கை விட்டு விட்டார். மோடிக்கு குடும்பம் கிடையாது,
மகன் கிடையாது. அதனால் அவருக்கு குடும்பம் என்ற அமைப்பைப் பற்றி தெரியாது. குடும்ப
அமைப்பையே வெறுக்கிறார்.
முத்தலாக்கினால்
பாதிக்கப்படும் இஸ்லாமியப் பெண்களைப் பற்றி கவலைப்படுவதாகக் கூறும் மோடி தன்னால் கைவிடப்
பட்டு பாதிக்கப்பட்ட ஒரு இந்துப் பெண்ணைப் பற்றி ஏன் வாய் திறப்பதே இல்லை?”
என்று கேட்டு மோடியின் மானத்தை பறக்க விட்டுள்ளார்.
மோடி
ஒழுங்காக சந்திரபாபு நாயுடு என்றே அழைத்திருக்கலாம். அவருடைய வாய்க்கொழுப்பினால் நன்றாகவே
சூடு வாங்கியியுள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் வாரிசு அரசியலை உணர்த்தவே மோடி அவ்வாறு குறிப்பிட்டார். இதில் நீங்கள் ரசிக்கின்ற தரம் தாழ்ந்த பேச்சை பேசியது சந்திரபாபு நாயுடுவே. இன்றும் சில குடும்பங்களில் (கம்யூனிஸ்டு அரசியல்வாதிகள் குடும்பங்கள் உட்பட) கணவன்- மனைவி ஏதோ காரணங்களால் பிரிகிறார்கள். அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். என்ன காரணம் எனத் தெரியாமலேயே கணவனை அவதூறு செய்வது தரம் தாழ்ந்த செயல். அதைத்தான் செய்திருக்கிறார்,சந்திரபாபு.மோடி என்ன அவருடைய மனைவியை முத்தலாக் செய்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்தாரா?
ReplyDeleteபல இயக்க மற்றும் அரசியல் தலைவர்கள் (கம்யூனிஸ்டுகள் உட்பட) திருமணம் செய்யாமல்,குடும்பம் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள்.அவர்களை எல்லாம் குடும்பத்தின் அருமை தெரியாதவர்கள் என்று ஏளனம் செய்யப்பட்டால் கை தட்டுவீர்களா? உச்சகட்ட அரசியல் அநாகரிக பேச்சுக்களை நாம்தான் ஊக்கப்படுத்துகிறோம்.அரசியல் விமர்சனங்களை வரவேற்போம்.ரசிப்போம்.ஆனால் தரம் தாழ்ந்த தனி மனித அநாகரிக பேச்சுக்களை வெறுப்போம்.
நன்றாக முட்டு கொடுக்க முயன்றுள்ளீர்கள்.
Deleteவாரிசு அரசியல் பற்றி பேச மோடிக்கு அருகதை கிடையாது. காங்கிரஸ் கட்சியை தூக்கி சாப்பிடக் கூடிய விதத்தில் வாரிசுகள் நிரம்பியுள்ளது பாஜகவில்தான்.
மோடி பிரதமராகும் முன்பு வரை தான் திருமணமானதை மறைத்து பிரம்மசாரி என்று நடிக்காமல் இருந்திருந்தால் அவர் தன் மனைவியை கைவிட்டதைப் பற்றிய விமர்சனம் வந்திருக்கப் போவதில்லை.
வேறு பெண்ணை மணம் செய்யவில்லை. ஆனால் ஒரு இளம் பொறியாளரை உளவு பார்த்த உத்தமன் அல்லவோ மோடி!
தரம் தாழ்ந்த பேச்சு என்பதிலும் மோடியை அடித்துக் கொள்ள யாரும் இல்லை. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியை பப்பு என்று அழைப்பதும் அறுவெறுப்பான உடல் மொழியும் பிரதமர் என்ற பதவிக்கு தகுதியற்ற மூன்றாந்தர மனிதன் என்பதைத்தான் காண்பித்தது.
மேலும் சந்திரபாபு நாயுடுவை தனிப்பட்ட முறையில் தாக்கியது மோடி. அவர் துவக்கினார். நாயுடு முடித்து வைத்தார். என்ன மோடிக்கு அடி பலம்!!!
மேலும் நாகரீகம் பற்றி பேசுபவர் அனானியாக ஒளிந்து கொள்வது அநாகரீகம் என்பது என் தாழ்மையான கருத்து
Delete