நாகேஸ்வர ராவ் என்ற பெயர் நினைவுக்கு வருகிறதா?
ர்பேல் கோப்புக்களை புரட்டிய காரணத்தால் நள்ளிரவில் சி.பி.ஐ இயக்குனர் அலோக் வர்மாவை தூக்கியடித்து புதிய இயக்குனராக மோடியால் கொண்டு வரப்பட்டவர்.
பீகார் முசாபர்பூரில் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த குழந்தைகளை அதன் உரிமையாளர் (பாஜக காரர்) பாலியல் வங்கொடுமை, பாலியல் தொழில் ஆகியவற்றுக்கு பயன்படுத்தி அந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் உள்ளது.
அந்த வழக்கை விசாரித்து வரும் இணை இயக்குனர் ஏ.கே.சர்மா என்பவரை மாற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட உத்தமர்கள் முயற்சி செய்ய, அவரை மாற்றக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
ஆனாலும் உச்ச நீதிமன்றமாவது உயர் நீதி மன்றமாவது என்று எச்.ராசா பாணியில் அந்த அதிகாரியை அங்கிருந்து தூக்கி அடித்து விட்டார் நாகேஸ்வரராவ்.
அதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி நேற்று உச்ச நீதி மன்றம் அவருக்கு தண்டனையாக ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஒரு மாதம் சிறை என்ற தண்டனை அளிக்கலாம் என்றாலும் போனால் போகிறது என்று
"இன்று மாலை வரை நீதிமன்றத்தின் ஒரு ஓரமாய் போய் உட்காரு"
என்ற தண்டனையை அளித்துள்ளது.
மோடியால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களும் மோடியைப் போலவே கேடியாகத்தான் இருக்கிறார்கள். மோடியைப் போலவே அசிங்கமும் படுகிறார்கள்.
No comments:
Post a Comment