மானவ் சர்மா
தபன் குமார் சக்ரவர்த்தி
இவர்கள் இருவரும் உச்ச நீதிமன்ற ஊழியர்கள். இவர்கள் இருவரையும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார்.
காரணம் அனில் அம்பானி.
ஆமாம்.
எரிக்ஸன் நிறுவனத்திற்கு அனில் அம்பானி தர வேண்டிய 550 கோடி ரூபாய் தொடர்பான ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
அந்த வழக்கில் தான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்கிறார் அனில் அம்பானி. அது மறுக்கப்படுகிறது.
ஆனால் தீர்ப்பின் விபரங்களை உச்ச நீதிமன்றத்தின் இணையத்தில் பதிவேற்றும் போது
“அனில் அம்பானி நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை”
என்று இந்த இருவர் பதிவேற்றுகிறார்.
நீதிமன்ற உத்தரவையே அனில் அம்பானிக்கு ஆதரவாக மாற்றி பதிவு செய்த ஒரு மிகப் பெரிய முறைகேட்டை செய்த அந்த இரண்டு அதிகாரிகளையும் தலைமை நீதிபதி பணி நீக்கம் செய்து விட்டார்.
ஒரு தீர்ப்பையே மாற்றி பதிவு செய்யக் கூடிய அளவிற்கு தைரியம் வருகிறது என்றால் அந்த தைரியத்தை கொடுத்தது யார்?
அனில் அம்பானியின் பணமா?
அனில் அம்பானி 30,000 கோடி ரூபாய் சம்பாதிப்பதற்காக ஹெச்.ஏ.எல் நிறுவனத்தையே ரபேல் விமானக் கொள்முதலிலிருந்து கழட்டி விட்ட மோடியா?
உச்ச நீதிமன்றப் பணி போனாலும் அந்த பணியில் எஞ்சிய காலத்தில் சம்பாதிக்கக் கூடியதை விட பல மடங்கு பணத்தை அனில் அம்பானி தந்திருக்க மாட்டாரா என்ன?
வேலை கொடுப்பாரா என்பது சந்தேகம்தான். அனில் அம்பானிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்திற்கு துரோகம் செய்தது போல வேறு யாராவது இன்னும் பெரிய முதலாளிக்கு ஆதரவாக தனக்கும் துரோகம் செய்து விடுவார்கள் என்ற அச்சம் இருக்குமல்லவா!!!
அம்பானி போன்ற பண முதலைகளுக்கு துணை போகும் அரசு ஊழியர்கள் வேலையை நம்பியா இருக்கிறார்கள். கண்டிப்பாக அம்பானியிடம் பெரும் தொகை வாங்கியிருப்பார்கள். செட்டிலாகி விடுவார்கள்.
ReplyDelete