இரவு 2 மணிக்கு யோசித்து சித்தியிடம் ஆலோசனை கேட்டு காலை விடிந்ததும் பாஜகவில் ஐக்கியமாகி விட்டார் நாட்டாமை. அவரும் அவர் மனைவியும் மட்டுமே உறுப்பினர்களாக இருந்த போதிலும் தன் கட்சியையே இணைத்ததாக சொல்லும் தைரியத்தை பாராட்டத்தான் வேண்டும்.
உங்களை முதல்வராக பார்க்க வேண்டும் என்ற உங்கள் மாமியாரின் ஆசையை நிறைவேற்றத்தானே நீங்கள் ஆட்டுக்காரனுக்கு சால்வை போட்டு “பஞ்சத்துக்கு சங்கி”யாக மாறிக் கொண்டீர்கள்?
ஆனால் அது நடக்குமா? அத்தைக்கு மீசை முளைத்தால்தானே சித்தப்பா!
சரி, அது கிடக்கட்டும், உங்க கிட்டே இருந்து ஓடிப்போன கரு.நாகராஜன், இப்போ பாஜகவில பெரிய இடத்தில இருக்காரு. அவர் பதவியை விட பெரிய பதவி உங்களுக்கு தருவாங்களா?
நாட்டாமைல உங்களுக்கு ஜோடி போட்ட குஷ்பு அக்கா கூட பெரிய பதவில இருக்காங்க,, அவங்களை விட சினிமாலயும் அரசியலிலும் சித்தி சீனியர், அவங்களுக்கு என்ன போஸ்ட்?
அனைத்து விஷயங்கள் தொடர்பாகவும் டீலிங் போடாமலா சாக்கடைல சங்கமிச்சிருப்பீங்க! அது என்னன்னு உங்களுக்கு மட்டும்தானேதெரியும்!
மச்சான் ராதாரவியை மறந்திட்டிங்களே?
ReplyDelete