பெரிய வீராதி வீரன் மாதிரி ஆட்டுத்தாடி ரெவி சீன் போட்டுக் கொண்டு சனாதனப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தாலும் “பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் வீக்” என்பதை அவ்வப்போது பல சம்பவங்கள் காட்டிக் கொடுத்து விடுகின்றன.
அப்படித்தான் இப்போது பொன்முடி விஷயத்திலும் அசிங்கப்பட்டு நிற்கிறது ஆட்டுத்தாடி. உச்ச நீதிமன்றம் சூடு கொடுத்த பின்பு அவருக்கு வேறு வழியில்லை.
முதல்வரும் பொன்முடியும் ரெவியை பார்த்த பார்வை அருமை. ரெவியின் அந்த வருத்தமான புன்னகை அருமையிலும் அருமை . . . ரெஸ்ட் ரூம் போவது உட்பட தான் செய்யும் எல்லாவற்றையும் ட்விட்டரில் பதிவு செய்யும் இந்த நிகழ்ச்சி பற்றி மட்டும் வாய் திறக்கவில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் அரசியல் சாசனம்தான் எல்லாமும். அதை மீற யாருக்கும் உரிமை கிடையாது என்பதைத்தான் உச்ச நீதிமன்றம் அழுத்தமாக பதிவு செய்துள்ளது.
இதை ரெவி உள்ளிட்ட சங்கி வகையறாக்களும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். ஆனால் திருந்த மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம்,,,,
No comments:
Post a Comment