தேர்தல் பத்திர விபரங்களை தேர்தல் ஆணையம் தன் இணைய தளத்தில் வெளியிட்டு விட்டது. கில்லாடித்தனமான ஒரு வேலையை செய்துள்ளது. இரண்டு பட்டியல்களை வெளியிட்டுள்ளது. கொடுத்தது ஒன்று, பெற்றது இன்னொன்று. யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்ற விபரம் கிடையாது. ரொம்பவும் மெனக்கெடாமல் அதை அவ்வளவு சுலபமாக கண்டறிய முடியாது.
அந்த பட்டியல் குறித்து எழுத நிறைய உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன்.
பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்த போது கண்ணில் ப்ட்ட ஒரு விபரம் உருவாக்கிய சந்தேகத்தை இங்கே எழுதியுள்ளேன்.
PEGASUS
PROPERTIES LIMITED என்ற நிறுவனம் பத்து கோடி
ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளது.
இரண்டும்
ஒன்றா என்று உறுதிப்படுத்திக் கொள்ள இணையத்தில் தேடினால் போதுமான விபரங்கள் கிடைக்கவில்லை.
சந்தேகத்தை அதிகப்படுத்தும் ஒரு முக்கியத்தகவலைத் தவிர.
PEGASUS
PROPERTIES LIMITED நிறுவனம், ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் துணை நிறுவனம் என்ற தகவல்தான்
அது.
No comments:
Post a Comment