Saturday, March 9, 2024

அந்த குழந்தையே மோடிதான் . . .


 மதுரைக் கோட்டத் தோழர் பகத்சிங் அவர்களின் பதிவை பகிர்ந்து கொள்கிறேன். மோடி சொன்ன பொய்கள் என்று தொகுத்து பக்கத்திற்கு ஒரு பொய் என்று கணக்கிட்டால் கூட புளிச்ச மாவு ஆஜானின் வெண்முரசு போல பத்து புத்தகங்கள் வரும் போல . . .







தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்பார்கள், ஆனா இது போஜனத்துக்கு பதிலா பொய்யைத்தான் மூன்று வேளையும் சாப்பிடுது, மனசாட்சி உறுத்தல் ஒன்றுமில்லை.
நரேந்திர மோடியின் 'ஜூம்லா' (போலி) என்ன என்பதை சரிபார்ப்போம்:
நரேந்திர மோடி சொல்கிறார்.
■ நேற்று கொல்கத்தாவில் மோடி கூறுகையில், கொல்கத்தாவிற்கு சிறுவயதில் (𝐁𝐚𝐜𝐡𝐩𝐚𝐧 𝐦𝐞) வரும்போது, ​​தனது முக்கிய ஈர்ப்பு கொல்கத்தா மெட்ரோ தான்.
உண்மை:
⭕️
1972-கொல்கத்தா மெட்ரோ இரயில்வேயின் அடிக்கல் டிசம்பர் 29 ஆம் தேதி திருமதி இந்திராகாந்தி அம்மையாரால் நாட்டப்பட்டது.
⭕️
1984 - 24 அக்டோபர், மெட்ரோ இரயில்வே, கொல்கத்தா- இந்தியாவின் முதல் மெட்ரோ தொடங்கப்பட்டது. 3.4 கிமீ தூரத்திற்கு எஸ்பிளனேடில் இருந்து போவானிபூர் (இப்போது நேதாஜி பவன்) வரை வணிக சேவைகள் தொடங்கப்பட்டன.
♦️
நரேந்திர மோடி 17 செப்டம்பர் 1950 இல் பிறந்தார் (ஜும்லா இல்லையென்றால்).
1984 - 1950 : ▶︎ 34 வயது மனிதன் தன்னை குழந்தை என்று எப்படி அழைத்துக்கொள்வார் ?

No comments:

Post a Comment