போலி
முகநூல் ஐ.டி களுடன் உரையாடுவது எனக்கு ஒரு பொழுது போக்கு. இரண்டு நாட்கள் முன்பாக
எங்கள் தஞ்சைக் கோட்டச்சங்க மூத்த தலைவரும் என்னுடைய சின்ன மாமனாருமான தோழர் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி
அவர்களின் பெயரில் ஒரு நட்பழைப்பு வந்திருந்தது.
அது
போலிக் கணக்கு என்று தெரிந்தும் தோழர் எஸ்.ஆர்.கே அவர்களை ஒரு முறை கேட்டு உறுதிப்படுத்திக்
கொண்டேன்.
பிறகுதான்
ஆட்டம் தொடங்கியது.
நட்பழைப்பை
ஏற்று நானே இன்பாக்ஸில் தகவல் அனுப்பினேன். குசலம் எல்லாம் விசாரித்த பின்பு எனக்கு
உதவ முடியுமா என்ற கேள்வியை நானே முதலில் கேட்டு
விட்டேன். சொல்லுங்கள் என்று அந்த போலி பெரிய மனதோடு சொல்ல, கூகிள் நிறுவன பங்குகளை
வாங்க 5000 டாலர் வேண்டும் என்று கேட்க, என் டோக்கியோ வங்கி எண்ணை அனுப்புகிறேன் என்று
சீனும் போட அந்த போலி என்னை ப்ளாக் செய்து விட்டது.
கேட்கறதுதான்
கேக்கறோம், கொஞ்சம் பெரிசா கேப்போம்னு ஐயாயிரம் டாலர் கேட்டா அது ஒரு குத்தமாங்க? அதுக்கு
போய் கோபிச்சிக்கிட்டு ப்ளாக் செஞ்சிட்டாரு
பிகு : இந்த
சம்பவம் நடந்தும் நாலு நாளாச்சு. எழுதியும் இரண்டு நாளாச்சி. காலையில் சொன்ன அதே காரணம்தான்.
நெடும் பயணம் காரணமாக புதிதாக எழுத முடியாததால் பகிர்ந்து கொள்கிறேன்.
No comments:
Post a Comment